களமிறங்கிய இந்திய தேர்தல் ஆணையம்! களை கட்டும் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், காஷ்மீர் தேர்தல்!
டெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களுக்கான பணியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது. மகாராஷ்டிரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் வாக்காளர்கள் பட்டியலைப் புதுப்பிக்கும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பதினெட்டாவது மக்களவைக்கான பொதுத் தேர்தல்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஆயத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 2024 ஜூலை 1-ந் தேதியை, தகுதித் தேதியாக வைத்து வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது. மூன்று மாநிலங்களிலும் தற்போதுள்ள சட்டமன்றங்களின் பதவிக்காலம் முறையே 03.11.2024, 26.11.2024 மற்றும் 05.01.2025 அன்று முடிவடைய உள்ளது. மேலும் இந்த சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் அவற்றின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு நடத்தப்பட வேண்டும்.

இது தவிர, தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவையை அமைப்பதற்காக ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலும் நடத்தப்பட உள்ளது. சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தல்களில் ஜம்மு-காஷ்மீர் மக்களின் பெரும் பங்கேற்பைக் கண்ட ஆணையம், ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியலை 2024 ஜூலை 1-ஐ தகுதித் தேதியாகக் கொண்டு புதுப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. கடந்த செய்தியாளர் கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், "மக்களவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்கள் பெருமளவில் பங்கேற்றது மிகவும் நம்பிக்கையுடன் ஊக்கமளிப்பதாக உள்ளது. இது ஜனநாயகத்தில் பங்கேற்க மக்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருப்பது முக்கியமாகும். அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி, அவர்களின் எதிர்காலத்தையும், நிர்வாகத்தையும் தீர்மானிப்பது மிகவும் அவசியமாகும். இதைச் செய்ய உதவுவதில் ஆணையம் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. விரைவில் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் செயல்முறையை ஆணையம் தொடங்கும்" என்று கூறியிருந்தார்.
வாக்காளர் பட்டியலின் கடைசி சிறப்பு சுருக்க திருத்தம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2024 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு நடத்தப்பட்டது. தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம், 2021 மூலம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிரிவு 14-ல் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, ஒரு வருடத்தில் நான்கு தகுதி தேதிகள் வழங்குவதற்கான ஏற்பாடு இப்போது நடைமுறையில் உள்ளது. அதன்படி, தகுதியுள்ள மற்றும் பதிவு செய்யாத அனைத்து குடிமக்களுக்கும் வாக்காளர் பட்டியலில் தங்களைப் பதிவு செய்து கொள்வதற்கும், அதன் மூலம் வரவிருக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறுவதற்கும் ஆணையம் வகை செய்துள்ளது. 01.07.2024 முதல் ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்கள் மற்றும் ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல்களின் 2-வது சிறப்பு சுருக்க திருத்தத்தை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.
தூய்மையான, உள்ளடக்கிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களே சுதந்திரமான, நியாயமான மற்றும் நம்பகமான தேர்தல்களின் அடித்தளம் என்று தேர்தல் ஆணையம் உறுதியாக நம்புகிறது. வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு தீவிர மறுபரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
வாக்குச்சாவடி மட்டத்திலான அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று தகவல்களைத் திரட்டவும், வாக்குச்சாவடிகளை வரையறுக்கவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி வீடு வீடாகச் சென்று சரிபார்த்தல் மற்றும் வாக்குச்சாவடி வரையறை 25.06.2024 முதல் 24.07.2024 வரை மேற்கொள்ளப்படும்.
வரைவு வாக்காளர் பட்டியல் 25.07.2024 அன்று வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்களைச் செய்ய விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 25.07.2024 முதல், 09.08.2024 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதற்கான தேதியை தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பார்.
வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கு பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் 20.08.2024 அன்று வெளியிடப்படும்.
குறைபாடுகள் இல்லாத வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதில் ஆணையத்தின் தீவிரமான நீடித்த கவனம் எப்போதும் உள்ளது, இதனால் தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான உரிமையை இழக்கக்கூடாது; எந்தவொரு போலியான, தகுதியற்ற பதிவுகளும் இல்லாமல் குறைபாடுகள் இல்லாத வாக்காளர் பட்டியலை பராமரிக்க முடியும். எனவே, தகுதியுள்ள வாக்காளர்கள் இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்தால், எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications