சும்மா பறக்கலாம்..4 வழிச்சாலை ஆகும் ஈசிஆர்..பணி எப்போது முடியும்..நிதின் கட்காரியின் மேஜர் அப்டேட்
சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 694 கி.மீ தொலைவு கொண்ட கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
டெல்லி: சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 694 கி.மீட்டர் தொலைவு கொண்ட கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் ரூ.24,435 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் வைகோ மற்றும் சண்முகம் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் நிதின் கட்காரி இந்த தகவலை கூறினார்.
தமிழகத்தின் முக்கிய சாலைகளில் ஒன்று கிழக்கு கடற்கரை சாலை. சென்னை - கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலயை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் இருந்து பாண்டிச்சேரி வழியாக செல்லும் இந்த சாலையில் நாள் தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அதிலும் சென்னையில் இருந்து வார இறுதி நாட்களில் ஈசிஆர் சாலைகளில் கார்கள் போன்ற சொகுசு வாகனங்கள் சீறிப்பாய்வதை காண முடியும்.

சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?
வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் நெரிசல் மிக்கதாகாக மாறி வரும் ஈசிஆர் சாலை விரிவாக்கம் செய்யப்படுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படுமா? என்று நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் வைகோ, சண்முகம் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

ரூ.24,435 கோடி நிதி ஒதுக்கீடு
மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் செய்யப்படும். கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக ரூ.24,435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளும் நடைபெற்று வருகிறது. விரிவாக்கத்தின் போது பாலங்கள், இணைப்பு சாலைகள், சுரங்க பாதைகள் போன்றவையும் அமைக்கப்பட இருப்பதாகவும் இந்த பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும்" என்றார்.

8 பிரிவுகளாக பிரித்து
கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரை 697 கிலோ மீட்டர் நீளம் உள்ளது. இதை எட்டு பிரிவுகளாக பிரித்து விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது புதுவை முதல் கடலூர் பூண்டியாங்குப்பம் வரையிலான 38 கிலோ மீட்டர் தூர பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வருகிற நவம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் முடிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாகப்பட்டினம்-ராமநாதபுரம்-தூத்துக்குடி
முகையூர் - மரக்காணம் இடையிலான 31 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாகப்பட்டினம்-ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையிலான சாலை விரிவாக்க பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மரக்காணம்-புதுச்சேரி இடையிலான 46 கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்த புள்ளிகள் கோரியுள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் முடிவுக்கு வரும்
இந்த சாலை விரிவாக்க பணிகளை பொறுத்தவரை தூத்துக்குடி டூ திருச்செந்தூர், திருச்செந்தூர் டூ - கன்னியாகுமரி இடையிலான சாலை விரிவாக்க திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மாநில அரசிடம் ஒப்படைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி ஒப்பந்தம் மாநில அரசுடன் கையெழுத்தானது. சாலை விரிவாக்க பணிகள் தற்போது துரிதமாக நடப்பதாகவும், அடுத்த ஆண்டுக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications