லோக்சபா வரை சென்ற லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி விவகாரம்.. மாணிக்கம் தாகூர் நோட்டீஸ்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி சிக்கியது தொடர்பாக புயலை கிளப்ப விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 4ம் தேதி (இன்று) தொடங்கி டிசம்பர் 22ம் தேதி வரை 19 நாட்கள் நடக்கும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்து இருந்தார்.

இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். அதோடு மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும். கூட்டத்தொடரை முடக்க வேண்டாம் என அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரகலாத் ஜோஷி கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் தான் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா என இருசபைகளும் இன்று கூட உள்ளன. இந்த கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்திய தண்டணை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார். அதாவது மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை பிரதமர் அலுவலகத்தின் பெயரை கூறி மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்பி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
இதுபற்றி மாணிக்கம் தாகூர் எம்பி கூறுகையில், ‛‛லோக்சபாவில் அமலாக்கத்துறைக்கு எதிராக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளேன். இதுபற்றி நாடாளுமன்றத்தில் கட்டாயம் விவாதிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications