எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. டெண்டர் முறைகேடு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.. சிக்கல்!
டெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
Recommended Video
அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. மிக முக்கிய துறையான இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக தரப்பு தொடர்ந்து புகார் வைத்து வருகிறது.
டெண்டர்களில் பல முறைகேடு நடந்து இருப்பதாக ஏற்கனவே அறப்போர் இயக்கமும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தது.
அதோடு எடப்பாடிக்கு நெருக்கமான நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையும், அதற்கு முன்பாக லஞ்ச ஒழிப்புத்துறையும் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடுகளை செய்துள்ளதாக 2018லேயே திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மொத்தம் 4800 கோடி ரூபாய் அளவிற்கு இதில் முறைகேடு நடந்தாக புகார் வைக்கப்பட்டது. பல்வேறு நெடுஞ்சாலை துறை டெண்டர்களை தனது உறவினர்களுக்கு கொடுத்து ஊழல் செய்தார் என்று புகார் வைக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இதில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்தது.

விசாரணை இல்லை
இதை எதிர்த்து எடப்பாடி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இதில் சிபிஐ விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது. அதன்பின் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவே இல்லை. இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு கடந்த 2 வாரம் முன் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி ரமணா, இன்று வழக்கை (ஆகஸ்ட் 2) விசாரிக்க போவதாக அறிவித்தார். இதையடுத்து வழக்கு இன்று உச்ச நீதிமன்றதில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

எவ்வளவு
இன்றைய விசாரணையை முன்னிட்டு ஆர். எஸ் பாரதி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முறைகேட்டு புகார் விவரங்கள் பின்வருமாறு -
வண்டலூர் - வாலாஜா சாலை 4 வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வைக்கப்பட்டது. இதில் 200 கோடி ஒப்பந்தம் எஸ்பிகே அண்ட் கோ செய்யப்பட்டதில் முறைகேடு செய்யப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது. அதோடு பல்வேறு கோட்ட சாலைகளை மேம்படுத்துவதில், புதிய சாலைகள் போடுவதில் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

எடப்பாடி முறைகேடு
இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் 4 வழிச் சாலை 715 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1500 கோடியில் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதேபோல் . திருநெல்வேலி-செங்கோட்டை-கொல்லம் 4 வழிச் சாலை விரிவாக்க 720 கோடி ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதிலும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்று புகார் வைக்கப்பட்டது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications