என் தம்பியைவா தள்ளி விட்டே.. உன் தம்பியை கொன்னுட்டேன் பாரு.. அதிர வைத்த டெல்லி சிறுவன்
8 வயது சிறுவன் ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்திருக்கிறான்.
டெல்லி: எப்படி இதை எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. இதில் யார் பக்கம் தவறு என்றும் தெரியவில்லை. சமூகம் எதை நோக்கிப் போகிறது என்றும் புரியவில்லை. தனது தம்பியை ஒரு சிறுமி தள்ளி விட்டாள் என்பதற்காக அந்த சிறுமியின் தம்பியை கொலை செய்துள்ளான் ஒரு எட்டு வயது சிறுவன்.
டெல்லியே நடுங்கிப் போயுள்ளது இந்த சம்பவத்தால். 8 வயதில் பழி தீர்க்கும் உணர்வு ஒரு சிறுவனுக்கு வருகிறது என்றால் இங்கு யார் குற்றவாளி என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. எங்கிருந்து இந்த குணத்தை அந்த சிறுவன் பெற்றான் என்பதும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
தெற்கு டெல்லியின் பதேபூர் சிக்ரி பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு வயது ஒன்றரைதான். அந்த பிஞ்சுக் குழந்தையின் உடலை சாக்கடை ஒன்றிலிருந்து போலீஸார் மீட்டுள்ளனர்.

சிறுமி
நடந்தது இதுதான். கொலை செய்த 8 வயது சிறுவனுக்கு தம்பி இருக்கிறான். அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி, இந்த சிறுவனை கீழே தள்ளி விட்டுள்ளாள். அதில் குட்டிப் பையனின் நெற்றியில் அடிபட்டு ரத்தம் வந்து வீங்கி விட்டது. இதனால் இரு குடும்பங்களுக்கும் இடையே மோதல் வெடித்து வாய்ச்சண்டை போட்டுக் கொண்டனர்.

விபரீதம்
இதைப் பார்த்த 8 வயது சிறுவனின் மனதில் நம்ம தம்பியை தள்ளி விட்டு விட்டாளே என்று அந்த சிறுமி மீது கோபம் வந்துள்ளது. சிறுமியைப் பழிவாங்க யோசித்துள்ளான் இவன். இதையடுத்து புத்தி விபரீதமாகி, அந்த சிறுமியின் தம்பியை அடித்துக் கொலை செய்து விட்டான். உடலையும் தூக்கிக் கொண்டு போய் சாக்கடையில் போட்டு விட்டான். செய்த செயல் பின்னர் பயத்தைக் கொடுக்க தலைமறைவாகி விட்டான்.

விசாரணை
இருவரையும் காணவில்லை என்று இரு குடும்பத்தாரும் போலீஸுக்குப் போனார்கள். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோதுதான் உடல் சிக்கியது, தலைமறைவான 8 வயது சிறுவனும் சிக்கினான். அவனிடம் மன நல ஆலோசகர்கள் முன்னிலையில் கவுன்சலிங் கொடுத்தபோதுதான் கொலை விவரம் வெளியாகி அனைவரும் அதிர்ந்தனர்.

ஆலோசனை
தற்போது சிறுவனை மன நலம் கருதி அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர் போலீஸார். சட்ட நிபுணர்களுடன் தொடர் ஆலோசனையில் தற்போது போலீஸார் இறங்கியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications