போதையில் நடுவானில் விமான பணியாளருக்கு முத்தம் கொடுத்த முதியவர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
டெல்லி: விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது பயணிக்கு போதை தலைக்கேறியதால் அவர் விமான பணியாளருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக விமானத்தில் பெண் மீது பயணி சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தால் அந்த நபரின் வேலையும் பறிபோனது. இது போல் விமானத்தில் உட்கார்ந்து கொண்டு முகம் சுளிக்கும் செயல்களை பலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு விமான போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விமானத்தில் நடுவானில் விமான பணியாளரிடம் போதை பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆம்! அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து அலாஸ்காவிற்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த விமானத்தில் முதல் வகுப்பில் டேவிட் ஆலன் பர்க் (61) என்ற முதியவர் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். பின்பு விமானம் டேக் ஆப் ஆனதும் எல்லாரையும் போல் அந்த முதியவருக்கும் மதுபானம் கொடுக்கப்பட்டது.
அதை குடித்து விட்டு போதை தலைக்கேறியதும் விமான ஆண் பணியாளரிடம் ரகளை செய்ததாக தெரிகிறது. மேலும் விமான ஊழியரிடம் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், எனக்கு உங்களை மிகவும் பிடித்திருக்கிறது என கூறியதுடன் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து கழுத்தில் முத்தம் கொடுத்துவிட்டார்.

அத்தோடு விடாமல் விமானிக்கு கொண்டு சென்ற உணவையும் பிடுங்கி கீழே கொட்டி நாசம் செய்ததாகவும் கூறப்படுகிறது. குடிபோதையில் அமர்க்களம் செய்த முதியவரை பயணிகள் பிடித்து சமாதானம் செய்து 1 மணி நேரம் கழித்து இருக்கையில் உட்கார வைத்தனர். நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்த தகராறு குறித்து விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விமானி தகவல் தெரிவித்தார்.
அலாஸ்காவில் விமானம் தரையிரங்கியது. உடனே முதியவரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் தான் எந்த தவறையும் செய்யவில்லை. மது மட்டுமே அருந்தினேன் என அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த முதியவர் தனக்கு முத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டிய விமான பணியாளரின் புகாரின் பேரில் அந்த பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணைக்கு பிறகு அந்த முதியவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விடுவித்தனர். இதையடுத்து வரும் 27 ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். நடுவானில் அத்தனை அட்டூழியத்தையும் செய்துவிட்டு அந்த முதியவர் நான் அவனில்லை பாணியில் நடித்ததுதான் அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications