டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த விதிமீறலும் இல்லை.. பிரதமர் மோடியை மேலும் 2 புகாரில் இருந்து விடுவித்தது.. தேர்தல் ஆணையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    விசாரணையில் மோடியை எதிர்த்த ஒரே அதிகாரி என்ன நடந்தது ?

    டெல்லி: பிரதமர் மோடியின் செயல்பாட்டில் எந்த தேர்தல் விதிமீறலும் இல்லை என்று கூறி மேலும் இரண்டு புகார்களில் இருந்து தேர்தல் ஆணையம் அவரை விடுவித்துள்ளது.

    மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது. தற்போது வரை ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் நடக்க உள்ளது. கடைசி கட்டமாக வரும் மே 19ம் தேதி மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடக்கிறது.

    Election Commission gives clean chit to PM Modi in two more cases include ahmedabad road show and pulwama remark

    பிரதமர் மோடி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரது பேச்சில் விதிமீறல் இருப்பதாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையம் புகார் அளித்து உள்ளது.

    3ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடந்த நிலையில், குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் திறந்தவெளி வாகனத்தில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி பிரதமர் மோடி ஒட்டுபோட சென்றார். அவரது செயல்பாடு தேர்தல் விதிமீறல் என காங்கிரஸ் கட்சி புகார் அளித்து இருந்தது.

    இதேபோல், புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது தொடர்பாக கர்நாடகாவின் சித்ரதுர்காவில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி மோடி பேசியதாகவும் அதுவும் தேர்தல் விதிமீறல் என்றும் காங்கிரஸ் புகார் அளித்து இருந்தது.

    திப்பு சுல்தானை இம்ரான் கான் புகழ... சசி தரூர் அதை பாராட்ட... கடுகடுப்பில் பாஜகதிப்பு சுல்தானை இம்ரான் கான் புகழ... சசி தரூர் அதை பாராட்ட... கடுகடுப்பில் பாஜக

    இந்த இரண்டு புகார்களையும் இன்று விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், பிரதமர் மோடியின் பேச்சில் எந்த விதிமீறலும் இல்லை என இரண்டு புகாரிலும் இருந்தும் அவரை விடுவித்தது. முன்னதாக ஏற்கனவே ராஜஸ்தானில் அணுகுண்டு தொடர்பான பேச்சு, மகாராஷ்டிராவில் பேசிய புல்வாமா தாக்குதல் தொடர்பான இரண்டு புகார் உள்பட சில புகார்களில் இருந்து தேர்தல் ஆணையம் மோடி பேச்சில் தவறு இல்லை என விடுவித்தது.

    English summary
    lok sabha elections 2019 : Election Commission gives clean chit to PM Modi in two more cases include ahmedabad road show and pulwama remark
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X