Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் பத்திர நன்கொடையில் அதானி, அம்பானி நிறுவனம் எவ்வளவு வழங்கியது? பட்டியலில் பெயர் மிஸ்ஸிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை விபரங்களை எஸ்பிஐ வழங்கிய நிலையில் அதன் விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் பல நிறுவனங்களின் பெயர்கள் உள்ள நிலையில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களான அதானவி, அம்பானி நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெறாதது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

இந்தியாவில் எஸ்பிஐ வங்கியில் தேர்தல் பத்திரங்கள் வாங்கி கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை இருந்தது. இதில் நன்கொடை வழங்கியவர்களின் பெயர் விபரம் வெளியே தெரியாது. இந்நிலையில் தான் வெளிப்படைத்தன்மை இல்லை என தேர்தல் பத்திர திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Electoral Bond There was no record of Adani Group or Reliance Industries

இதனை விசாரித்த அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திரம் செல்லாது என அறிவித்தது. மேலும் 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் 2024 பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் வரும் 15ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்த கடந்த 12ம் தேதி தேர்தல் பத்திரம் விபரங்களை எஸ்பிஐ, தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது. எஸ்பிஐ வழங்கிய விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் நன்கொடை பெற்ற கட்சிகளின் விபரங்கள் தனித்தனியே உள்ளது. தேர்தல் பத்திரத்தின் எண் இல்லாத நிலையில் எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை வழங்கியது என்பது புரியாத புதிராக உள்ளது.

மாறாக தேர்தல் பத்திரம் மூலம் 2019 முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்கள், நன்கொடை பெற்ற கட்சிகளின் பெயர்கள் மட்டுமே உள்ளது. இதில் பல முன்னணி நிறுவனங்கள் நன்கொடைகளை அரசியல் கட்சிகளுக்கும் வழங்கி உள்ளன. நிறுவனங்கள் வழங்கிய நன்கொடை தொடர்பான விபரம் என்பது 337 பக்கங்களிலும், கட்சிகள் பெற்ற நன்கொடை விபரம் என்பது 426 பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியான விபரங்களின் படி பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக, பிஆர்எஸ், சிவசேனா, தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஜேடிஎஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஜேடியூ, ஆர்ஜேடி, ஆம்ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் கோடிக்கணக்கில் நன்கொடைகள் கிடைத்துள்ளது.

அதேபோல் பிரபல நிறுவனங்களாக உள்ள கிராசிம் இன்டஸ்ட்ரீட், மேகா என்ஜினீயரிங், டொரண்ட் பவர், பாரதி ஏர்டெல், டிஎல்எஃப் கமர்சியல் டெவலப்பர்ஸ், வேதாந்தா, அப்பல்லோ டயர்ஸ், லட்சுமி மிட்டல், பிடிஆர், சூலா ஓயின், வெல்ஸ்பன், சன் பார்மா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்க நன்கொடைகள் வழங்கி உள்ளன.

இருப்பினும் இந்தியாவின் பெரும் பணக்காரர்களாக உள்ள அதானி மற்றும் அம்பானி ஆகியோர் தொடர்புடைய நிறுவனங்களின் பெயர்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதனால் அவர்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கவில்லையா? இல்லாவிட்டால் வேறு நிறுவனங்களின் பெயர்களில் அவர்கள் நன்கொடை வழங்கினார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+