எமர்ஜென்சி சட்டப்படி தவறானது அல்ல! முர்முவுக்கு புதிய விளக்கம் தந்த சசி தரூர்
டெல்லி: எமர்ஜென்சி என்பது சட்டத்திற்கு எதிரானதல்ல; அது சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று புதிய விளக்கத்தை முன்வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர்.
மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக வந்தால், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தையே திருத்திவிடுவார் என்று காங்கிரஸ் கட்சி உட்பட 'இந்தியா’ கூட்டணியில் உள்ள பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வந்தன. ஆனால், அதை எல்லாம் மீறி 240 இடங்களில் பாஜக வெற்றி பெற்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராகிவிட்டார் மோடி.

இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு எந்த ஜனநாயகத்திற்கு எதிராக மோடி செயல்படுவார் என்ற வாதத்தைக் காங்கிரஸ் கட்சி முன்வைத்ததே அதே வாதத்தைக் கொண்டு திருப்பி அடித்துள்ளார் பிரதமர் மோடி. அதாவது இந்திரா காந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்து 50 ஆண்டுகளை நிறைவடைந்துள்ள நிலையில் அதைக் கண்டித்து நடைபெற்று வரும் முதல் மக்களவைக் கூட்டத் தொடரில் சபாநாயகர் ஒம் பிர்லா ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தபோது தனது உரையில் கண்டனத்தைப் பதிய வைத்திருந்தார்.
கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தின் முன்பாக பேசிய பிரதமர் மோடி, 'எதிர்க்கட்சிகள் இன்னும் எமர்ஜென்சி மனநிலையிலேயே அரசியல் செய்து வருகின்றன’ என்று மறைமுகமாகச் சாடி இருந்தார். காங்கிரஸ் கட்சி மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்து. அதைப்போலவே ஓம் பிர்லா உரையையும் கண்டித்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் விதமாக அவசரநிலையைப் பற்றிய விவாதத்தை பாஜக கிளப்பி வருகிறது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி எம்பி சசி தரூர், என்.டி டிவிக்கு அளித்த நேர்காணலில் எமர்ஜென்சியை நியாயப்படுத்தும் வகையில் கருத்து கூறியுள்ளது விவாதமாக மாறியுள்ளது. அவர் அந்தப் பேட்டியில், “அவசரநிலை என்பது ஜனநாயகத்திற்கு வேண்டுமானால் விரோதமாக இருந்திருக்கலாம். ஆனால் அது ஒன்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல” என்று புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.
திருவனந்தபுரத்திலிருந்துதொடர்ந்து நான்காவது முறையாக எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மூத்த தலைவர் சசி தரூர், 'செங்கோல்' விவகாரம், நீட் வினாத்தாள் கசிவு ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே பாஜக எமர்ஜென்சி பற்றி விவாதித்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
நேற்று மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் தங்களின் உரையில் அவசரநிலை பற்றி குறிப்பிட்டிருந்தனர். அதற்கு, 49 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை ஏன் இப்போது எடுத்து விவாதிக்கிறது பாஜக அரசாங்கம் எனக் கேட்டுள்ளார் தரூர்.
"1975இல் இந்திரா காந்தி அரசாங்கம் செய்தது அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டே இருந்தது. எனவே குடியரசுத் தலைவர் எமர்ஜென்சி என்பது அரசியலமைப்பிற்கு எதிரான தாக்குதல் என்று அல்லது அது அரசியலமைப்பின் மீதான தாக்குதல் என்று சொல்வது சட்டப்படி உண்மையல்ல; தவறானது. ஆகவே இப்போது பதவியில் உள்ள குடியரசுத் தலைவர் அரசியலமைப்பிற்கு எதிராகத் தனது தாக்குதல் நடத்தியுள்ளார்.
நான் எமர்ஜென்சியை ஆதரிக்கவில்லை, எதிர்க்கட்சி தலைவர்களைக் கைது செய்தது, பத்திரிகைகளைத் தணிக்கை செய்தது என அந்தக் காலகட்டத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன அவை ஜனநாயகத்திற்கு விரோதமானவை. ஆனால் அவற்றை அரசியலமைப்பிற்கு விரோதமான நடவடிக்கைகள் எனச் சொல்ல முடியாது. நான் சவால் விட்டுச் சொல்கிறேன், எமர்ஜென்சி சட்டத்திற்குப் புறம்பானது அல்ல. சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கைதான் அது” என்று வாதிட்டுள்ளார் சசி தரூர்.
'செங்கோல்' விவாதம் பற்றி சசி தரூர் பதிலளிக்கையில், “அது மன்னர் ஆட்சியின் சின்னம். நாம் குடியரசு நாடு. இது ஒரு அடையாள அரசியல். இந்தியாவில் உள்ள ஒரு பகுதியினரை மட்டும் இது மதிக்கிறது. இந்த விசயத்தில் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க நான் விரும்பவில்லை” என்று கூறிய அவரிடம் ராகுல் காந்திக்கு ஏதேனும் ஆலோசனை உங்களிடம் உள்ளதா? எனக் கேட்கப்பட்டது.
இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்து தனது முதல் அரசியல் சாசனப் பதவியை வகிக்கும் ராகுல் காந்திக்கு ஏதேனும் ஆலோசனைகள் உள்ளதா என்று கேட்டதற்கு, முன்னாள் காங்கிரஸ் தலைவர் தனது சொந்த உரிமையில் "கணிசமான தலைவராக" உருவெடுத்துள்ளார் என்றார். “அவருக்கு என்னைப் போன்றவர்களிடமிருந்து எந்த ஆலோசனையும் தேவையில்லை” என்று பஞ்ச் வைத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications