ப சிதம்பரத்திற்கு 12 நாடுகளில் சொத்துக்கள் இருக்கு .. உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில்
டெல்லி: ப சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் ப சிதம்பரம் உள்பட வழக்கில் தொடர்புடையோருக்கு 12 நாடுகளில் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப சிதம்பரத்தின் ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று பட்டியலிடப்படவில்லை. இதனிடையே ப சிதம்பரத்தை பண மோசடி வழக்கில் கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டு இருந்தது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை ப சிதம்பரம் அணுகிய நிலையில் அமலாக்கத்துறை திங்கள் வரை கைது செய்ய தடை விதித்தது. மேலும் பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி இன்று பதில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை, ப சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அந்த மனுவில், நிதி புலனாய்வு பிரிவு வழங்கியுள்ள தகவலின்படி, ப சிதம்பரம் மற்றும் அவரோடு சேர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு 12 வெளிநாடுகளில் சொத்துக்களும் வங்கி கணக்குகளும் உள்ளது. குறிப்பாக அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டீஸ் வர்ஜீனியா தீவு, பிரான்ஸ், கிரீஸ், மலேசியா, மொனாக்கோ, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளது. இதை தங்கள் முன்பு சமர்பித்துள்ளோம்.
இது தொடர்பான பண பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணைகளை ப சிதம்பரம் மற்றும் குற்றம்சாட்டப்பட்டோர் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications