"அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும்" செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
டெல்லி: செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 2-வது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்து வருகிறார். அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சில கருத்துக்களை முன்வைத்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து சென்ற போதே செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி உடல் நலம் தேறியதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே செந்தில் பாலாஜி மனைவி மேகலா சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி உடல் நலம் தேறியதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே செந்தில் பாலாஜி மனைவி மேகலா சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
முதலில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனு மீது விசாரணை நடத்தியது. நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டு இருந்ததால், 3வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல" எனத் தீர்ப்பளித்தார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை 2-வது நாளாக இன்றும் நடைபெற்றும் வருகிறது. அதன்படி, இன்று பிற்பகலில் மீண்டும் இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போபன்னா மற்றும் எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் வாதத்தின் போது, அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நீதிபதிகள் கூறுகையில், அதிகமான தரவுகளை பெறவே ஒருவரை விசாரணை முகமைகள் கைது செய்கின்றன. சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறியவே விசாரணை நடைபெறுகிறது. சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருக்கிறது தானே... என்று நீதிபதிகள் கூறினர். அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டு வரும் நிலையில், நீதிபதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications