தொற்று நோய் சட்ட திருத்தம் மருத்துவர்களை காக்கும்.. கவனமாக இருப்போம்.. பிரதமர் மோடி கோரிக்கை!
தொற்று நோய்கள் சட்ட திருத்தம் 2020 மூலம் மருத்துவ பணியாளர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் தாக்கப்பட்டால் அவர்களுக்கு போதுமான உதவிகள் வழங்கப்படும்
டெல்லி: தொற்று நோய்கள் சட்ட திருத்தம் 2020 மூலம் மருத்துவ பணியாளர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் தாக்கப்பட்டால் அவர்களுக்கு போதுமான உதவிகள் வழங்கப்படும்என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா இந்தியாவில் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. முக்கியமாக மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லியில் கொரோனா தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது.
நாடு முழுக்க 826 பேர் இந்த கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பு குறித்து மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.

மோடி பேச்சு
பிரதமர் மோடி தனது பேச்சில், கொரோனாவிற்கு எதிராக அனைத்து துறைகளும் இந்தியாவில் போராடி வருகிறது. மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து வருகிறோம். பொது இடங்களில் எச்சில் துப்புவது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என மக்கள் உணர்ந்துள்ளனர். பொது இடங்களில் எச்சில் துப்புகிற பழக்கத்தை இனி நாம் முழுமையாக கைவிட வேண்டும்.

முக கவசம்
கொரோனாவால் முக கவசம் என்பது நமது வாழ்வின் அங்கமாகிவிட்டது. முக கவசம் அணிவதாலேயே ஒருவர் நோயாளி என நினைக்கக் கூடாது. முக கவசம் என்பது பண்பட்ட ஒரு சமூகத்தின் அடையாளம். கொரோனாவில் இருந்து நம்மையும் பிறரையும் பாதுகாக்க முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக நம்பிக்கையுடன் அசட்டையாக இருக்க கூடாது.

தனிமனித இடைவெளி
உங்களை எல்லாம் மீண்டும் தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நாம் பண்டிகையை கொண்டாடும் விதம் மாறியுள்ளது. கிறிஸ்துவர்கள் வீட்டிலேயே ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி உள்ளனர். அதேபோல் இது ரம்ஜான் மாதம். நாம் போன ரம்ஜான் போது இதேபோல் ஒரு விஷயம் நடக்கும் என்று எதிர்பார்த்து கூட இருக்க மாட்டும். நாம் மிகவும் கவனமாக வீட்டிற்குள் இருந்தால்தான் ஈகை திருநாளை கொண்டாட முடியும்.

சட்டம்
தொற்று நோய்கள் சட்ட திருத்தம் 2020 மூலம் மருத்துவ பணியாளர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் தாக்கப்பட்டால் அவர்களுக்கு போதுமான உதவிகள் வழங்கப்படும். மருத்துவர்கள் எல்லோரும் இந்த சட்டத்தை வரவேற்று இருக்கிறார்கள். மக்கள் எல்லோரும் மருத்துவர்களை மதிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications