குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000.. முதல்வர் ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக பரபரப்பு புகார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவினர் தேர்தல் விதிகளை மீறினர். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது
டெல்லி: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் தேர்தல் பிரசாரத்தில் நடத்தை விதிகளை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மீறியதாக பெரிய புகார் பட்டியல் அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விஷயத்தில் முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருக்கு ஷாகாஸ் நாட்டிக்ஸ் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தென்னரசு களமிறங்கினார். கடந்த மாதம் 27 ம் தேதி ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
கடந்த 2 ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். தென்னரசு தோல்வியடைந்தாலும் டெபாசிட்டை தக்க வைத்தார்.

66,575 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி
இந்த தேர்தலில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43, 981 வாக்குகளுடன் பின்தங்கி தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் டெபாசிட் தொகையை தக்க வைத்தார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் மேனகா10,804 வாக்குகள் பெற்று 3வது இடத்தையும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,301 வாக்குகள் பெற்று 4வது இடத்தையும் பிடித்தனர். இருப்பினும் இருவரும் டெபாசிட் இழந்தனர்.

திமுக கூட்டணி-எதிர்க்கட்சிகள் மோதல்
இந்நிலையில் தான் இந்த வெற்றி என்பது திமுகவின் 2 ஆண்டு ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பெருமை பேசி வருகின்றனர். மாறாக அதிமுக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக, உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இது திமுகவின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றியில்லை. அவர்கள் கொடுத்த பணம், பரிசு பொருட்களுக்கு கிடைத்த வெற்றி தான் என கூறினர். இந்த விஷயத்தில் இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து வார்த்தை போர் நீடித்து வருகிறது. மேலும் தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரிகளிடம் புகார்கள் வழங்கப்பட்டன. இருப்பினும் இந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முதல்வர் ஸ்டாலின் மீது அதிமுக புகார்
இந்நிலையில் தான் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதிதாக அதிமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுகவினர் மீது பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டுள்ளது.

ரூ.1000 என்ற பேச்சை குறிப்பிட்டு...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளனர். திமுகவினர் வாக்காளர்களை அடைத்து வைத்தனர். பிரசாரத்தில் விலங்குகளை பயன்படுத்தியதோடு பள்ளி வளாகத்தில் பிரசாரம் செய்தனர். பிரசாரத்தின் இறுதிநாளில் முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பேசியது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்
இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்கள், பார்வையாளர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் (Show Cause) அனுப்ப வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டசப்படி ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். தேர்தல் விதிமீறியவர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தேர்தல் அதிகாரி, அலுவலர்கள் மீதும் ஆக்சனில் இறங்க வேண்டும்'' என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications