ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த், அமித்ஷா பங்கேற்பு.. உயர்மட்ட குழு பரபரப்பு அறிக்கை
டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இன்று முதல் கூட்டத்தை நடத்தியது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்துக்கள் கேட்க முடிவு செய்யப்பட்டது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற வாக்குறுதியினை 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த போது பாஜக அறிவித்திருந்தது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமானதா என்பதை ஆராய்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி 8 பேர் கொண்ட குழுவினை மத்திய அரசு அமைத்தது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்.கே.சிங் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
முன்னதாக லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் உறுப்பினராக இருந்தார். எனினும் மல்லிகார்ஜூனா கார்கேவிற்கு பதில் குலாம் நபி ஆசாத்தை உறுப்பினராக அரசு நியமித்த காரணத்தால், வர் குழுவின் ஒரு பகுதியாக இருக்க மறுத்துவிட்டார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இந்த குழுவில் இடம் பெறவில்லை.

இதுதவிர இந்தக் குழுவில் மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகவும், சட்ட செயலாளர் நிதன் சந்திரா குழுவின் செயலாளராகவும் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேசிய, மாநில மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை நடத்துவது தொடர்பாக 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை முன்னாள் பொதுச்செயலாளர் சுபாஷ் சி காஷ்யப், முன்னாள் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் இதர குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேகவால் ஆகியோர் இன்றைய கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை முடிவு செய்வதற்காக ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர. அதன்பிறகே கூட்டம் நடந்தது
தேசிய மற்றும் மாநிலத் தேர்தல்களைத் தவிர, உள்ளாட்சித் தேர்தல்களையும் இந்தக் குழு ஆய்வு செய்து, தேர்தலை நடத்துவதற்கான கட்டமைப்பு மற்றும் காலக்கெடு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை இந்த குழு வழங்க போகிறதாம்.
முன்னதாக 1967 வரை, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில், நான்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. 1968-69ல் சில மாநில சட்டசபைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. லோக்சபாவும் 1970ல் ஒரு வருடம் முன்னதாகவே கலைக்கப்பட்டது . அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அதற்கு மேல் சாத்தியமில்லாமல் போனது.
இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான உயர்மட்ட குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்துக்கள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சட்ட ஆணையமு பரிந்துரைகளை வழங்குமாறு ஆலோசனை குழு கேட்டுக் கொண்டுள்ளது.
-
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications