சிக்ஸர்.. ஒரே அறிவிப்பில் "குளிர" வைத்த மத்திய அரசு.. டிரைவர்களுக்கு பயங்கர குஷி.. இனி இது கட்டாயம்
டெல்லி: லாரி டிரைவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.. இதையடுத்து, மிகுந்த உற்சாகத்தில் பூரித்துள்ளனர் லாரி ஓட்டுனர்கள்.. என்ன காரணம்?
எவ்வளவுதான் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும், சாலை விபத்துக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. இதற்கு பெரும்பாலான காரணம், சாலைவிதிமுறைகளை மீறுவதுதான்.
வாகனத்தை அதிக வேகமாக இயக்குவது, இடது வலது என்பதை சரியாக கடைபிடிக்காதது, ஓவர்டேக் செய்வது, போக்குவரத்து சைகைகளை, சரியாக செய்யாமல், அல்லது கவனிக்காமல் இருப்பது, செல்போனில் பேசிக்கொண்டே செல்வது, தண்ணி அடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, மோசமான வானிலை, சாலைகள் பராமரிப்பின்றி இப்படி எத்தனையோ விதமான காரணங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

நெடுஞ்சாலை பயணம்: அதிலும், லாரி டிரைவர்கள் உயிரை பணயம் வைத்து நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்கி வருகிறார்கள். நெடுஞ்சாலைகளில் அதிக பாரத்தை ஏற்றி செல்பவர்கள்.. தொலைதூர பயணத்தை, மாவட்டம் விட்டுமாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்லக்கூடியவர்கள்.. இரவு நேரத்தில், பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்பதாலும், விரைந்து பொருட்களை கொண்டுசேர்க்க வேண்டும் என்பதற்காகவும் இரவெல்லாம் தூங்காமல் லாரி ஓட்டி செல்பவர்கள்..
எவ்வளவு காஸ்ட்லி சரக்குகள் அந்த லாரியில் கொண்டுசெல்லப்பட்டாலும், லாரி டிரைவர்களின் கேபின்கள் என்னவோ, அந்த அளவுக்கு சரியாக இருக்காது.. ஒரே ஒரு கிளினர் அவரது பக்கத்தில் உட்கார முடியும்.. அதற்கு மேல் இடவசதியும் இருக்காது. குறுக்கும் நெடுக்குமாக படுத்து தூங்குவதும், தங்குவதும், சாப்பிடுவதும், எல்லாமே அந்த லாரியில்தான்.. மழை வந்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி, பனி கொட்டினாலும் சரி, டிரைவருக்கென்று ஒதுக்கப்பட்ட அந்த குறுகிய இடத்தில்தான் சகல சங்கடமும்.!
கொசுத்தொல்லை: இதில் கொசுத்தொல்லையும், புழுக்கமும் விடிய விடிய டிரைவர்களை நிலைகுலைய வைத்துவிடும்.. வெகுதொலைவுக்கு டிரைவர்கள் லாரிகளை ஓட்டிச்செல்லும்போது, அவர்கள் மிகவும் சோர்வடைகிறார்கள்.. இது சில சமயம் கோர விபத்துகளிலும் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், லாரி டிரைவர்களின் வேதனையையும், இன்னல்களையும் அறிந்து மத்திய அரசு அவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. நாட்டிலுள்ள அனைத்து லாரிகளிலும் டிரைவர் கேபினுக்கு ஏசி வசதி வரப்போவதாக சொன்னார்கள்.. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, விற்பனைக்கு வரும் லாரிகளில் ஏசி கேபின் வசதியை கட்டாயமாக்கும் கோப்பில், தற்போது கையெழுத்திட்டுள்ளார்.
லாரி கேபின்களில் குளிர்சாதன வசதி கட்டாயமாக்கப்படும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
லாரி கேபின்கள்: போக்குவரத்து துறையில் லாரி ஓட்டுநர்கள் முக்கிய பங்காற்றுவதாக கடந்த மாதம் பூரித்து சொல்லியிருந்த அமைச்சர் நிதின் கட்கரி, அவர்களின் பணிச்சூழல் மற்றும் மனநிலை தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்றும் கூறியிருந்தார். அத்துடன், லாரி கேபின்களில் குளிர்சாதன வசதி கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்திருந்திருந்த நிலையில், லாரி கேபின்களில் குளிர்சாதன வசதி கட்டாயமாக்கப்படும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்வீட் ஒன்றையும் நிதின் கட்கரி பதிவிட்டுள்ளார்.. அதில், "என்2 மற்றும் என்3 லாரிகளின் கேபின்களில் குளிர்சாதன வசதி கட்டாயமாக்கப்படும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. லாரி ஓட்டுநர்கள் சாலை பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றனர். இந்த முடிவு லாரி ஓட்டுநர்களுக்கு வேலைக்கான வசதியான நிலைமைகளை வழங்குவதில் ஒரு மைல்கல்லாக இருக்கும். இதன் மூலம் லாரி டிரைவர்களின் செயல்திறனை மேம்படுவதுடன், சோர்வு பிரச்சனை தீர்க்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
சபாஷ்: மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு, பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்புகள் வந்தவண்ணம் உள்ளன.. குறிப்பாக, இந்த "ஏசி குளுகுளு" அறிவிப்பானது, லாரி டிரைவர்களின் மனதை குளிர வைத்து வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications