போராட்ட களத்திற்கு வந்த வாஷிங் மெஷின்கள்.. தெறிக்க விடும் விவசாயிகள்.. வேற லெவல்!
டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பணிகளை எளிதாக்கும் வகையில் துணி துவைப்பதற்காக வாஷிங் மெஷின்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லட்சக்கணக்கானோர் குவிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.
கடுங்குளிருக்கு அஞ்சாத விவசாயிகள் 6 மாதங்களானாலும் சரி வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டம் முடிவுக்கு வரும் என்கிறார்கள்.

விவசாயிகள்
இந்த நிலையில் இந்த போராட்டக் களத்தில் பெரும்பாலான விவசாயிகள் வயதானவர்கள் என்பதால் அவர்களது வேலைப் பளுவை குறைக்க இளைஞர்கள் பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 15 நாட்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு சப்பாத்தி செய்ய இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது.

போராட்டம்
இதன் மூலம் 1 மணி நேரத்தில் 2000 சப்பாத்திகள் தயார் செய்யப்படுகின்றன. அது போல் தரையில் உட்கார்ந்து போராட்டம் நடத்தும் விவசாயிகளின் உடைகளில் அதிக கறைகள் உள்ளன. இதனால் இதை சுலபப்படுத்த போராட்ட களத்திற்கு வாஷிங் மெஷின் வரவழைக்கப்பட்டுள்ளது.

ஆற்றல்
இதில்தான் பெரும்பாலான விவசாயிகள் துணிகளை துவைத்து போராடுவதற்கான ஆற்றலை மிச்சப்படுகிறார்கள். அது போல் மொபைல் போன் சார்ஜ் போடுவதற்கு நிறைய சார்ஜிங் பாயிண்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இலவச வைபை சேவைகளும் வழங்கப்படுகின்றன. இதற்காக டிராக்டர்களில் பேட்டரிகள், ஜெனரேட்டர்கள், சூரிய மன்ஆற்றல் ஆகியன உள்ளன.

25 மிஷின்கள்
அது போல் கால்களுக்கு மசாஜ் செய்யும் மிஷினும் வந்திறங்கியுள்ளது. இதை சர்வசேத தன்னார்வலர் கால்சா என்பது கடந்த வெள்ளிக்கிழமை கொண்டு வந்திருந்தார். சுமார் 25 மிஷின்கள் நிறுவப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப மசாஜ் மெஷின்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அத்துடன் மருத்துவர்களும் விவசாயிகளின் உடல் நிலையை கண்காணித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications