"இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி" அமைச்சர் கடிதத்தை படித்து பாருங்கள்- தமிழில் மோடி ட்வீட்
டெல்லி: வேளாண் சட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதுபற்றிய அவரது டுவிட்டர் பதிவு: வேளாண் துறை அமைச்சர் நரேந்திர தாமர், தனது உணர்வுகளை வேளாண் சகோதர சகோதரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இயல்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உழவர் பெருமக்கள் அதைப் படிக்க வேண்டுகிறேன். இந்தத் தகவலை பெருமளவில் பகிர வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மோடி தனது டுவிட்டில் கூறியுள்ளார்.

மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உட்பட மேலும் பல மொழிகளிலும் இதேபோல டுவிட் வெளியிட்டுள்ளார் மோடி. விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுக்க ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், மோடி இவ்வாறு பெரும்பாலான மொழிகளில் ட்வீட் செய்துள்ளார். மேலும் விவசாயத் துறை அமைச்சர் தோமர் எழுதிய கடிதத்தின் தமிழாக்கத்தையும், மோடி தனது டுவிட்டர் பதிவில் இணைத்துள்ளார். ஒவ்வொரு மொழி டுவிட்டிலும் தோமரின் கடிதம் அந்தந்த மொழிக்கு ஏற்ப மாற்றப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
மினிமம் சப்போர்ட் விலையில் மாற்றம் இல்லை என்று ஏற்கனவே மோடி உறுதியளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications