விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு
டெல்லி: விவசாய போராட்டம் குறித்த தவறான செய்திகளையும், வன்முறையை தூண்டும் வகையிலும் செய்திகள் வெளியிட்டதாக கூறி ஜீ நியூஸ் சேனலின் மூன்று வீடியோக்களை டெலிட் செய்யும்படி செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தரநிர்ணய ஆணையம் (என்பிடிஎஸ்ஏ) உத்தரவிட்டுள்ளது. என்பிடிஎஸ்ஏ விதிமுறைகளை ஜீ நியூஸ் மீறி விட்டதாக இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
விவசாய போராட்டத்தின் போது கடந்த ஜனவரி 19, 20, 26 ஆகிய தேதிகளில் ஜீ நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட செய்திகளுக்கு எதிராக என்பிடிஎஸ்ஏவில் இந்த புகார் அளிக்கப்பட்டது. டெல்லியை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் இந்திரஜித் கோர்படே இந்த புகாரை அளித்து இருந்தார்.
இந்த புகார் தொடர்பாகவே தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு புகார்கள்
சமூக செயல்பாட்டாளர் இந்திரஜித் கோர்படே அளித்த முதல் புகாரில், ஜனவரி 25ம் தேதி ஒளிபரப்பப்பட்ட செய்தியில் விவசாயிகளை காலிஸ்தானி என்று குறிப்பிட்டதாகவும். சிங்கு எல்லை பகுதியை ஜீ செய்தியாளர் காலிஸ்தானிகளின் கூடாரம் என்று குறிப்பிட்டதாகவும். அவர்கள் இந்தியாவிற்கு எதிராக போர் தொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த செய்தி கலவரத்தை, வெறுப்பை பரப்பும் வகையில் இருந்ததாக அவர் செய்தியில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆதாரம்
இதற்கான வீடியோ ஆதாரங்கள், சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்யப்பட்ட ஜீ செய்தி லிங்குகள் ஆகியவற்றை அவர் பகிர்ந்து இருந்தார். இரண்டாவது புகாரில் ஜனவரி 29ம் தேதி ஒளிபரப்பான காட்சிகளில் ஜீ நியுசில் விவசாயிகள் செங்கோட்டையில் இருந்து தேசிய கொடியை அகற்றியதாக காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் விவசாயிகள் தேசிய கொடியை அகற்றவில்லை. இதில் ஜீ நியூஸ் பொய்யான செய்தியை பரப்பி உள்ளது என்று என்பிடிஎஸ்ஏயிடம் அவர் புகார் அளித்து இருந்தார்.

விளக்கம்
இந்த நிலையில் முதல் புகாரை ஜீ நியூஸ் மறுத்தது. நாங்கள் விவசாயிகளை மதிக்கிறோம். அவர்கள்தான் நமக்கு உணவு அளிக்கிறார்கள். அவர்களை நாங்கள் தவறாக பேசவில்லை என்று ஜீ நியூஸ் விளக்கம் அளித்தது. இரண்டாவது புகார் தொடர்பாக விளக்கமளித்த ஜீ நியூஸ், செய்தியாளர் லைவ் செய்தியில் தேசிய கொடி அகற்றப்பட்டதாக தவறுதலாக கூறினார். இது தவறுதானே ஒழியே, தெரிந்து செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டு இருந்தது.

நடவடிக்கை
இந்த நிலையில் இந்த இரண்டு புகார்களையும் என்பிடிஎஸ்ஏ விசாரணையை செய்தது. வீடியோ ஆதாரங்களை சோதனை செய்தது. முடிவில் ஜீ நியூஸ் Broadcasting Standards and Specific Guideline Covering Reportage, Fundamental Standards விதி எண் 1 மற்றும் 2 ஐ மீறிவிட்டதாக உத்தரவிட்டது. அதோடு இனி இதுபோன்ற தவறுகளை செய்ய கூடாது. அவர்கள் விதி மீறி உறுதியாக தெரிகிறது.

டெலிட்
செய்தி ஊடகங்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும் என்று என்பிடிஎஸ்ஏ உத்தரவிட்டது. மேலும் விவசாய போராட்டம் குறித்த தவறான செய்திகளையும், வன்முறையை தூண்டும் வகையிலும் செய்திகள் வெளியிட்டதாக கூறி ஜீ நியூஸ் சேனலின் மூன்று வீடியோக்களை டெலிட் செய்யும்படி செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தரநிர்ணய ஆணையம் (என்பிடிஎஸ்ஏ) உத்தரவிட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications