அனைத்து மாநில விவசாயிகளும் டெல்லிக்கு வருமாறு அழைப்பு.. டிச. 14-ம் தேதி பாஜக அலுவலகங்கள் முற்றுகை..!
டெல்லி: அனைத்து மாநில விவசாயிகளும் டெல்லிக்கு வருமாறு அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், டிசம்பர் 14-ம் தேதி பாஜக அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் பதற்றமான சூழல் உருவாகி வருவதால் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விவசாய சட்டம்
புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 13-வது நாளாக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இதுவரை 4 முறைக்கு மேல் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர்.

திட்டவட்டம்
ஆனால் எந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. புதிய விவசாய சட்டங்களை திரும்பபெற மத்திய அரசு தயாராக இல்லை என்பதை இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் விவசாயிகள் அறிந்துகொண்டனர். இதனால் இனியும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 14-ம் தேதி
இந்நிலையில் டிசம்பர் 12-ம் தேதி டெல்லி-ஆக்ரா சாலை மற்றும் டெல்லி-ஜெய்ப்பூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது மட்டுமின்றி டிசம்பர் 14-ம் தேதி பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசு முயற்சி
விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதால், விரைவில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications