மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்! மகா பஞ்சாயத்தில் விவசாயிகள் அதிரடி
டெல்லி: போராடும் மல்யுத்த வீரர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என விவசாய சங்கத்தினர் இன்று நடத்திய மகா பஞ்சாயத்து கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.
பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீராங்கனைகள்/வீரர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது இவர்களின் இரண்டாவது போராட்டமாகும். கடந்த ஜனவரி மாதம் இதே கோரிக்கையை முன்வைத்து இவர்கள் போராட்டத்தை தொடங்கியபோது அரசியில் கட்சியினர் ஆதரவளிக்க முன் வந்தனர். ஆனால் இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறி இவர்கள் தன்னிச்சையாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

போராட்டம் நாடு முழுவதும் விவாத பொருளான நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இது குறித்து விசாரணை நடத்த முன்வந்தது. விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் அளித்த வாக்குறுதியையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் விசாரணை நடந்து 60 நாட்களுக்கு மேல் ஆகியும், தற்போது வரை பிரிஜ் பூஷன் சிங் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகட் ஆகியோர் தலைமையில் மல்யுத்த வீரர்கள்/வீராங்கனைகள் போராட்டத்தை தொடர்ந்தனர். இரண்டாவது முறையாக மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியது நாடு முழுதும் மீண்டும் விவாதங்களை கிளப்பியது.
இந்த முறை அரசியல் கட்சிகள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஆதரவை மல்யுத்த வீரர்கள் வரவேற்றனர். சூழல் இவ்வாறு இருக்க கடந்த 28ம் தேதி புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத்தை முற்றுகையிட பெருமளவில் திரண்ட வீரர்கள் முன்னோக்கி சென்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் இவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகட் உள்ளிட்ட வீரர்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
மேலும், ஜந்தர் மந்தர் பகுதியில் இவர்களுக்கு போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றும் மறுத்துவிட்டது. போராட்டக்காரர்கள் விரும்பினால் வேறு இடத்தில் அனுமதியளிக்கப்படும் என்றும் கூறியிருந்தனர். இது மல்யுத்த வீரர்களிடையே கடும் அதிருப்தி ஏற்படவே, "பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்பி பிரிஜ் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய 7 நாட்களை எடுத்துக்கொண்ட டெல்லி போலீஸ் நியாயம் கேட்டு போராடிய எங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய 7 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தைதான் எடுத்துக்கொண்டது" என்று குற்றம்சாட்டினர்.
மேலும், பிரிஜ் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், தங்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும் ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசி எறிய உள்ளதாக வீரர்கள்/வீராங்கனைகள் அறிவித்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை கங்கை நதி கரைக்கு வந்த வீரர்களிடமிருந்து பதக்கங்களை விவசாய சங்க தலைவர்கள் பெற்றுக்கொண்டனர். மேலும் இப்பிரச்னைக்கு 5 நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என்றும் வாக்குறுதி அளித்தனர்.
இந்நிலையில் விவசாயிகள் காப் பஞ்சாயத்துகளை நடத்தினர். இதில், மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகள் ஏற்க ஜூன் 5ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு மீறும் பட்சத்தில் அதாவது ஜூன் 5ம் தேதி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட என்று பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) முடிவெடுத்துள்ளது. முசாபர்நகரில் நடைபெற்ற காப் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல டெல்லிக்கு பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என்றும் பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகைட் கூறியுள்ளார். மேலும் கூறுகையில், "மல்யுத்த வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஏற்றுக்கொள்ள முடியாது. முழு அரசாங்கமும் சேர்ந்த ஒரு நபரை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது" என்று விமர்சித்துள்ளனர்.
முன்னதாக வீரர்கள் டெல்லி கேட் அருகே உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்திருந்தனர். ஆனால் டெல்லி காவல்துறையினர் இதற்கு அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று மகா பஞ்சாயத்து முசாபர்நகரில் பாரதிய கிசான் யூனியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாய சங்கத்தினரும் பங்கேற்றிருந்தனர். இந்த கூட்டத்தின் முக்கிய முடிவுகள் நாளை எடுக்கப்பட இருக்கிறது. ஆனால் தற்போது வரை பேசியதில், "போரடும் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்கும் வரை விவசாய சங்கம் போராட்டம் தொடரும்" என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications