சவுக்கு சங்கர் பேட்டி.. பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திரும்ப கிடைத்த யூடியூப் சேனல்.. உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய குற்றச்சாட்டில் கைதான பெலிக்ஸ் ஜெரால்டுக்கு, ஜாமீன் தருவதற்கு நிபந்தனையாக யூடியூப் சேனலை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்து இருந்தது. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 6ம் தேதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் ஜாமீன் நிபந்தனையாக பெலிக்ஸ் ஜெரால்டின் யூடியூப் சேனலை மூட பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்த சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனியில் வைத்து கைது செய்தனர்.

இதனிடையே அதே சம்பவத்திற்காக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர். இதையடுத்து சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லி அருகே தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். அவரை திருச்சி தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கடந்த மே மாதம் 10-ந்தேதி கைது செய்து தமிழகம் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
சுமார் 80 நாட்களை தாண்டி சிறையில் இருந்த பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி பெலிக்ஸ் ஜெரால்டுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதே சமயம் யூடியூப் சேனலை மூட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. இதை எதிர்த்து பெலிக்ஸ் ஜெரால்டு சார்பில் வழக்கறிஞர் ஏ.எஸ்.வைரவன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவில், 'யூ டியூப் சேனலை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் டி.குமணன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரினார். இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், 'யூடியூப் சேனலை மூட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பி்த்த உத்தரவு தேவையற்றதாகும், தேவைக்கு அதிகமானதாகவும் இருக்கிறது. மனுதாரர் பெலிக்ஸ் ஜெரால்டை வேறு நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று கூறியது.
இதன்படி, ஜாமீன் நிபந்தனையாக பெலிக்ஸ் ஜெரால்டின் யூடியூப் சேனலை மூட பிறப்பித்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும் டியூப் சேனலை மூட வேண்டும் என்ற உத்தரவுக்கு கடந்த 6-ந் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடையை உறுதி செய்வதாக கூறியதுடன், இதன்படி இந்த ரிட் மனு முடித்து வைக்கப்படுகிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications