"2000 ரூபாய்".. மத்திய அரசின் அசத்தல் திட்டம்.. விதவை பெண்களுக்கு நிதியுதவி.. எப்படி விண்ணப்பிப்பது?
டெல்லி: விதவை பெண்களுக்கு மாதம் 2000 வரை ஓய்வூதியம் கிடைக்கும், திட்டம் குறித்து உங்களுக்கு தெரியுமா? எப்படி விண்ணப்பிக்க வேண்டும் தெரியுமா?
பொதுமக்களின் வசதிக்காக மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது.. அதில் ஒன்றுதான் சிறு சேமிப்பு திட்டங்களாகும்.
சிறுசேமிப்புகள்: இந்த சிறுசேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானது.. ஓரளவு அதிக வட்டி அளிக்ககூடியதுமாகும்.. தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன.. அதேபோல சில வங்கிகளும் நிரந்தர வைப்புக் கணக்குகளுக்கு கணிசமான வட்டியை அளிக்கின்றன. அரசு அங்கீகாரம் உள்ளதால் சேமிப்பும் பாதுகாப்பானவை.. வட்டியும் உரிய நேரத்தில் கிடைத்துவிடுகின்றன. இந்த சிறு சேமிப்பு திட்டங்களில், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
அதேபோல, விதவைப் பெண்களுக்கு வித்வா யோஜனா பென்ஷன் திட்டத்தின் கீழ் அரசு தரப்பில் இருந்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. நிதி பரிவர்த்தனைகளில் இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது... அரசாங்கம் நேரடியாக ஒரு பெறுநரின் வங்கிக் கணக்கிற்குத் தொகையை மாற்றுகிறது.
குழந்தைகள்: 18 வயது முதல் 65 வயது வரை உள்ள விதவைகளுக்கு இந்த ஓய்வூதியமானது கிடைக்கிறது. விதவைப் பெண்களுக்கு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளுக்கு அவர்களுக்கு 25 வயதாகும் வரை ஓய்வூதியம் கிடைக்கும். வித்வா பென்ஷன் யோஜனா மூலம், விதவை பெண்களுக்கு அரசாங்கம் நிதியுதவி வழங்குகிறது. தன்னம்பிக்கையுள்ளவர்களாக மாற்றும்..
மத்திய அரசு: பெண்களுக்கு மத்திய அரசு உதவக்கூடிய வகையில் உள்ள இன்னொரு திட்டம்தான், மகிளா சம்மான் சேமிப்புப் பத்திரம்.. சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தபால்துறை அலுவலகம் ஒன்றில், MSSC எனும் மகிளா சம்மான் சேமிப்பு பத்திர கணக்கை தொடங்கினார்... அதை ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்து எம்எஸ்எஸ்சி கணக்கில் நிறைய பெண்கள் சேரவேண்டும் என நானும் வலியுறுத்துகிறேன் என பிரதமர் மோடியும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த திட்டத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மட்டுமே இணைய முடியும். அவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்கள் சேமிக்கும் தொகையை வட்டியோடு திருப்பி அளிக்கும் பெண்களுக்கான மிகச் சிறந்த திட்டம் இது... 18 வயது நிரம்பிய அனைத்துப் பெண்களும் இணைய முடியும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுடைய பொறுப்பாளர்கள் பெயரில் (guardian) மூலம் இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.
இடைவெளி: ஒருவர் குறைந்தபட்சம் ரூ.1,000 தொடங்கி, அதிகபட்சமாக 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டை 100-ன் மடங்குகளில் தான் செய்யமுடியும். எடுத்துக்காட்டாக, ரூ1000, ரூ.1100, ரூ.1200, ரூ.1300 என்பது போல் முதலீடு செய்யலாம். அதிகபட்சம் எதுவும் இல்லை.. ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஆனால், ஒவ்வொரு கணக்கிற்கும் 3 மாத இடைவெளி இருக்க வேண்டும்.
நம் நாட்டில் உள்ள தபால் நிலையங்கள் அனைத்திலும் இதற்கான கணக்கை துவங்கலாம்.. டெபாசிட்டை ஆரம்பிக்க ஆதார் மற்றும் பான் கார்டு ஆவணங்கள் இணைத்து தர வேண்டும். ஆதார் கார்டு இல்லாதவர்கள், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை போன்றவற்றை தரலாம்.. ஆனால், ஆதார் இருப்பது, இந்த திட்டத்தை துவங்க எளிமையாக இருக்கும்.
டெபாசிட்: டெபாசிட்டை ஆரம்பித்து ஓராண்டு கழித்து, கணக்கிலிருக்கும் தொகையில் அதிகபட்சமாக 40 சதவிகித தொகையை எடுத்துக் கொள்ளலாம். டெபாசிட் கணக்கை தொடங்கியவர் 2 ஆண்டுகளுக்குள் இறந்துவிட்டால், அப்போது முழுத் தொகையும் வழங்கப்பட்டு விடும். டெபாசிட் போட்டிருப்பவர், உயிருக்கு போராடும் நிலைமை ஏற்பட்டால், மருத்துவ உதவிக்கு இந்த டெபாசிட் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்..

அதேபோல, பிள்ளைகளுக்காக முதலீடு செய்து வரும் பெற்றோர் அல்லது காப்பாளர் இறந்துவிட்டாலும் இடையில் முழுப் பணமும் தரப்பட்டுவிடும்.. இந்த 2 காரணங்கள் தவிர டெபாசிட் ஆரம்பித்து 6 மாதங்களுக்கு பிறகு கணக்கை முடித்துக்கொள்ள அனுமதிக்கப்படும். அப்போது 2 சதவிகித அபராத வட்டி கழிக்கப்பட்டு, அது வரைக்குமான காலத்துக்கு 5.5% வட்டி வழங்கப்படும்.
சேமிப்பு: இந்த திட்டத்தின், சேமிப்பு சான்றிதழ் திட்டத்துக்கு ஆண்டுக்கு 7.5% வட்டி வருமானம் வழங்கப்படுகிறது. இது மத்திய அரசின் திட்டம் என்பதால் முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு 100% உத்தரவாதம் இருக்கிறது. இந்த டெபாசிட்டில் செய்யப்படும் தொகைக்கு வருமான வரிச் சலுகை எதுவும் கிடையாது. அதேபோல், வட்டி வருமானத்துக்கும் வரிச் சலுகை கிடையாது.. ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.












Click it and Unblock the Notifications