கொரோனாவிலிருந்து மீண்டு வந்த கேரளா மாணவர்?.. இறுதி மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கும் அதிகாரிகள்
Recommended Video
டெல்லி: சீனாவிலிருந்து கேரளா மாநிலம் திருச்சூர் வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிருந்த நிலையில் அவர் தற்போது குணமடைந்ததாக சொல்லப்படுகிறது.
கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி 900-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் சார்ஸை விட மோசமாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்துகிறது.
40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இந்தியா உள்பட 25 நாடுகள் கொரோனா வைரஸை இறக்குமதி செய்து கொண்டுள்ளனர். அதாவது நோய் தொற்றால் இந்த நாடுகளை சேர்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்
இந்தியாவில் முதலில் கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த மாணவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புனேவுக்கு அனுப்பப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஜனவரி 30-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அது போல் கேரளாவை சேர்ந்த மற்றொரு மாணவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நெகட்டிவ்
இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கேரளா மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணமடைந்ததாக கூறப்படுகிறது. ஜனவரி 30-ஆம் தேதி பாசிட்டிவ் என காட்டிய அவரது ரத்த மாதிரிகள் தற்போது எடுத்த சோதனைகளில் நெகட்டிவ் காட்டியுள்ளதாக கூறுகின்றனர். எனினும் உறுதியான தகவல்கள் வரவில்லை.

முற்றிலும் குணமடைந்த நோய்
எனினும் அவரது ரத்த மாதிரிகள் புனேவுக்கு அனுப்பியுள்ளனர். அந்த முடிவுகளுக்காக கேரளா மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அப்படியிருக்கையில் கேரள மாணவருக்கு இந்த நோய் பாதிப்பு முற்றிலும் குணமடைந்தது எப்படி என தெரியவில்லை.

மருத்துவர்கள்
ஒரு வேளை அந்த நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கையான உணவுகள் கொடுக்கப்பட்டதா என தெரியவில்லை. கொரோனா வைரஸ் இரு நிலைகளை கொண்டது என கூறப்படுகிறது. அதில் முதல் நிலை என்றால் மற்ற வைரஸ் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது போல் கொடுத்து நோயாளியை காப்பாற்ற முடியும். ஆனால் இரண்டாம் நிலை வந்துவிட்டால் உயிரிழப்பு நிச்சயம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications