மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி காலமானார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மூத்த வழக்கறிஞரும் மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான சோலி சொராப்ஜி காலமானார். கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்த நிலையில் இன்று காலை சோலி சொராப்ஜியின் உயிர் பிரிந்தது.

1930ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த சோலி சொராப்ஜி சட்டம் படித்தார். மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு 1971ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக உயர்ந்தார். 1977 முதல் 1980 வரை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார்.

Former Attorney General For India Soli Sorabjee Passed Away

1989 முதல் 1990 வரை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். அதன்பிறகு 1998 முதல் 2004 வரையிலும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக சோலி சொராப்ஜி பணியாற்றினார். மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக போராடியதற்காக சோலி சொராப்ஜிக்கு பத்மவிபூஷண் விருதினை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது.

91வயதான சோலி சொராப்ஜி கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+