Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம்.. தீவிரம் காட்டும் மத்திய அரசு! இரண்டாவது கூட்டம் இன்று நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது கூட்டம் இன்று நடைபெறுகிறது.

கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சியில் அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து ஏராளமான மாற்றங்களை செய்திருக்கிறது. முத்தலாக் தடை, காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு ரத்து, வேளாண் சட்டங்கள், சிஏஏ போன்றவை பாஜகவுக்கு விமர்சனங்களையும், ஆதரவையும் மாறி மாறி கொடுத்திருக்கின்றன. இந்நிலையில் லிஸ்ட்டில் தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தையும் சேர்க்க பாஜக முயன்று வருகிறது. அதாவது, மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Former President Ramnath Kovind chairs 2nd meeting of One Nation One Election panel today

இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் மேலெழுந்துள்ளன. ஒருவேளை இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் புதியதாக அப்போதுதான் ஆட்சியமைத்த மாநில அரசுகளை மத்திய அரசு கலைத்துவிடுமா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. அதேபோல, இந்த திட்டம் ஜனநாயக தன்மையை ஒழித்துவிடும் என்றும், மாநில அரசுகளின் உரிமையை நசுக்கிவிடும் எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. என்னதான் விமர்சனங்கள் எழுந்தாலும், மத்திய அரசு இதிலிருந்த பின்வாங்குவதை போல தெரியவில்லை. எனவே திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.

இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் அதிக எம்.பி.க்களைக் கொண்ட எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆணைய முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அதேபோல மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், உயர்நிலைக் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பார். மத்திய சட்டத் துறைச் செயலர் நிதின் சந்திரா, குழுவின் செயலராகப் பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி நடைபெற்றது. 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தில் உள்ள சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குழுவின் இரண்டாவது கூட்டம் இன்று கூட்டப்படுகிறது. இதில் மத்திய சட்ட ஆணையம், தலைமை தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதேபோல இந்த திட்டத்திற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட திருத்தங்கள் குறித்து இந்த குழு பரிந்துரைக்க இருக்கிறது. இதற்காக சட்ட ஆணையம் இன்றைய கூட்டத்தில் சில விஷயங்களை, குழுவுடன் பகிர்ந்துக்கொள்கிறது.

முன்னதாக இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கட்சி சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த குழுவில் இடம் பெற மறுப்பு தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+