முதல் 10,000 கொரோனோ கேஸ்களுக்கு ஒன்றரை மாதம்.. லேட்டஸ்ட் 10,000 கேஸ்களுக்கு வெறும் 4 நாள்தான்.. ஷாக்
டெல்லி: முதல் 10,000 கொரோனா கேஸ்களை கண்டறிய இந்தியாவுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் பிடித்திருந்தாலும், 40,000 முதல் 50,000 வரையிலான கேஸ்களுக்கு வெறும் நான்கு நாட்கள்தான் ஆகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரப்படி, 52,952 என்ற அளவில் இருந்தது. இதில், மும்பை நகரம் மட்டும் 10,000 க்கும் மேற்பட்ட கேஸ்களை தாண்டியுள்ளது.

உலகளவில், தற்போது இந்தியாவை விட 13 நாடுகள் மட்டுமே அதிக கொரோனா தொற்றுநோயை கொண்டுள்ளது.
இந்தியாவில், 3-100 கொரோனா கேஸ்களுக்கு 14 நாட்கள் தேவைப்பட்டன. 100 - 1000 கேஸ்களுக்கு 14 நாட்கள் தேவைப்பட்டன. 1000 - 10000 கேஸ்களுக்கு 16 நாட்கள், 10000 - 50000 கேஸ்களுக்கு 23 நாட்கள் தேவைப்பட்டன. ஆனால், 40,000 - 50,000 கேஸ்களுக்கு வெறும் 4 நாட்கள்தான் ஆகியுள்ளன.
மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 3000 அல்லது அதற்கு மேற்பட்ட கேஸ்கள் உள்ள ஏழு மாநிலங்கள் உள்ளன. இவை அனைத்தும் தற்போது இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளை கொண்ட மாநிலங்களாக உள்ளன.












Click it and Unblock the Notifications