Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாட்டின் செல்வம் முஸ்லீம்களுக்கு செல்லும்.. மோடி பேச்சுக்கு ராகுல் தாக்கு! பிடிஆர் ஒரே வரியில் சாடல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேசியது இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதை பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதில் முதற்கட்ட வாக்குப்பதிவு மட்டும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நிறைவடைந்தது. அடுத்தகட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடக்கிறது.

From Rahul to PTR Opposition leaders reacted strongly for Modi Muslim speech in Rajasthan

இதற்கிடையே இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை பிரச்சார கூட்டத்தில் பேசினார். அதில் அவர் கூறிய சில கருத்துகள் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பினர்.

மோடி பேச்சு: அதாவது, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள் என்ற பிரதமர் மோடி, அப்படியானால் யாரிடம் இருந்து செல்வத்தை வாங்கி அதை யாருக்குப் பிரித்துத் தருவார்கள் என்று கேள்வி எழுப்பினார். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த செல்வத்தை இப்படி இழக்கப் போகிறீர்களா என்ற அவர், இதுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தான் இப்படி இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் அதிகாரம் எனக் கூறியதாகவும் அவர் பேசினார்.

இருப்பினும், பிரதமர் மோடியின் இந்த பேச்சைக் காங்கிரஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. தேர்தல் வாக்குறுதியில் எந்த இடத்திலும் அதுபோல காங்கிரஸ் சொல்லவில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

ராகுல் காந்தி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். மோடியின் பொய்கள் மிகவும் மோசமாகப் போய்விட்டதாகக் கூறிய அவர், இப்போது பொதுமக்களின் கவனத்தைப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவே மோடி இப்படிப் பேசுகிறார் என்று விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோடியின் பொய்களின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. பயத்தின் காரணமாக, அவர் இப்போது பொதுமக்களின் கவனத்தைப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப விரும்புகிறார். காங்கிரஸின் புரட்சிகர தேர்தல் அறிக்கைக்கு இப்போது நாடு ஆதரவு வரத் தொடங்கிவிட்டது. இந்த நாடு அதன் பிரச்சினைகளில் வாக்களிக்கும்.. அதன் வேலைவாய்ப்பு, அதன் குடும்பம் மற்றும் அதன் எதிர்காலத்திற்காக வாக்களிக்கும்" என்று ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் சாடியுள்ளார்.

காங்கிரஸ்: அதேபோல காங்கிரஸின் மூத்த தலைவர் பவன் கேரா, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்து அல்லது முஸ்லீம் என்ற வார்த்தை எங்காவது எழுதப்பட்டுள்ளதா என்பதைக் காட்டுமாறு பிரதமருக்குச் சவால் விடுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இதுபோன்ற சிந்தனை தான் உங்கள் மனநிலையிலும், உங்கள் அரசியல் விழுமியங்களிலும் இருக்கிறது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், பழங்குடியினர், நடுத்தர வர்க்கம் மற்றும் தொழிலாளர்களின் நீதியைப் பற்றித் தான் நாங்கள் தேர்தல் அறிக்கையில் பேசினோம். அதையும் எதிர்க்கிறீர்களா?" சாடியுள்ளார்.

பிடிஆர்: லும், பலரும் பிரதமர் பேச்சுக்குத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாடியுள்ளனர். தமிழ்நாடு ஐடி அமைச்சர் பிடிஆரும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை விமர்சித்துள்ளார். அதேபோல திமுகவின் செய்தி தொடர்பாளர் சரவணன், "தோல்வி பயத்தில் மோடி அவர்கள் பிதற்ற ஆரம்பித்துவிட்டார். இஸ்லாமியர்களைக் கேவலம் ஓட்டுக்காக இப்படிப் பேசலாமா? நெஞ்சம் பதைபதைக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+