சாதிச்சிட்டாங்களே.. மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடித்த நிர்மலா சீதாராமன்!
டெல்லி: முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முறியடித்துள்ளார். முன்பே அவர் நாட்டின் 2வது பெண் நிதியமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கடந்த ஜூன் 9 ஆம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மிகப் பிரம்மாண்டமான விழாவில் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார் மோடி. அதற்கு முதல் டெல்லி சம்விதான் சதனில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் பேசிய மோடி, "கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சி வெறும் ட்ரெய்லர்தான்" என்று குறிப்பிட்டார்.

மறுபடியும் புதிய ஆட்சி அமைப்பது பற்றி மோடி குறிப்பிடுகையில், மூன்றாவது முறையாக அமையும் ஆட்சியில், நாடு புதிய அத்தியாயங்களை எழுதும் என்றும் இது மோடியின் கியாரெண்டி என்றும் அவர் பேசி இருந்தார். கூட்டணிக் கட்சி எம்பிக்களின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், "இந்தக் கூட்டணி அதிகாரத்திற்காக ஒன்றிணைந்த கட்சிகளின் குழு அல்ல, முதலில் நாடுதான் முக்கியம் என்ற கொள்கையை உறுதிப்படுத்தக்கூடிய இயற்கையான கூட்டணி இது" என்று விளக்கமளித்திருந்தார்.
இதற்கு முன்பு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் போட்டியிடுவார் எனத் தகவல் கசிந்தது. ஆனால், அவர் போட்டியிடவில்லை. ஆகவே, மீண்டும் மோடியின் 3.0 அமைச்சரவையில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. மேலும் மோடி புதியவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. அந்த வதந்திகளை எல்லாம் முறியடித்து மத்திய நிதியமைச்சராக மீண்டும் பதவியேற்றார் நிர்மலா சீதாராமன். மீண்டும் நிதியமைச்சராகப் பதவியேற்ற அவர் 2024 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதன் மூலம் அவர் மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடிக்கப் போகிறார். அதாவது நிதியமைச்சர் சீதாராமன் தொடர்ச்சியாகத் தனது 7வது பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் நிதியமைச்சராகத் தொடர்ந்து ஆறு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடிக்க உள்ளார்.
நிர்மலா சீதாராமன் கடந்த 5 ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்துள்ளார். இப்போது வரை அவர் 2019 முதல் 2023 வரையிலான 6 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார். இதில் தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்த 2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டும் அடங்கும். பிப்ரவரி 2024 இல் ஒரு இடைக்கால பட்ஜெட்டை போட்டதன் மூலம், அவர் தொடர்ந்து ஆறு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தேசாய் மொத்தம் பத்து பட்ஜெட்களை தாக்கல் செய்தவர். வேறு எந்த ஒரு நிதியமைச்சரும் இத்தனை பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து சாதனைப் படைத்ததில்லை. அந்தப் பெருமை அவர் ஒருவருக்கே உண்டு. இதனிடையே தேசாய் மார்ச் 24, 1977 முதல் ஜூலை 28, 1979 வரை இந்தியாவின் நான்காவது பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த மாதம், நிர்மலா சீதாராமன் 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். இது அவரது ஏழாவது பட்ஜெட் ஆகும். மேலும் மோடியின் ஆட்சிக் காலம் இன்னும் 5 ஆண்டுகள் அவரை நீடித்தால், நிர்மலாவின் பட்ஜெட் பட்டியல் மேலும் கூடும். ஆக, தொடர்ந்து 7 பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ள அவர், வரும் காலங்களில் தேசாயின் 10 பட்ஜெட் என்ற ரெக்கார்டையும் முறியடிக்கப் போகிறார். இதில் சிறப்பு என்னவென்றால், ஒரு ஆண் நிதியமைச்சர் 60 ஆண்டுகளுக்கு முன்பு செய்த சாதனையை இப்போது ஒரு பெண் நிதியமைச்சராக நிர்மலா முறியடித்துக் காட்டியுள்ளார்.
தற்போதுள்ள மோடி அமைச்சரவையில் உள்ள பாஜக மூத்த தலைவர்களில் நிர்மலா சீதாராமனும் ஒருவர். 1959இல் பிறந்த இவர், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மத்திய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இதுவரை அவர் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடாமலே நிதியமைச்சராகப் பதவி வகித்து வருகிறார் என்பதும் முக்கியமான தகவல். இவர் 2016 முதல் கர்நாடகா மாநிலத்திலிருந்து ராஜ்ய சபாவுக்குத் தேர்வானார். அதற்கு முன்பாக 2014 முதல் 2016 வரை ஆந்திராவிலிருந்து தேர்வானார்.
2017 முதல் 2019வரை பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 2வது பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார். இந்திரா காந்திக்குப் பிறகு நாட்டின் 2வது பெண் நிதியமைச்சரும் இவர்தான். இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சரியான சான்று.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications