மோடி 3.0.. ஒவ்வொரு மாநிலத்துக்கும் எத்தனை அமைச்சர்கள்? இதிலும் உ.பி. தான் டாப்! அப்போ தமிழ்நாடு..?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்று கொண்ட நிலையில் அவருடன் அமைச்சரவையும் பதவி ஏற்றது. நேற்று அமைச்சரவைக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மாநில வாரியாக எந்தெந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் அமைச்சரவையும் பதவி ஏற்றுக்கொண்டது.

குறிப்பாக பாஜக மூத்த தலைவர்களும் ஏற்கனவே அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களோடு கட்சியின் தேசிய தலைவரான ஜே பி நட்டா உள்ளிட்ட 71 மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
இந்நிலையில் மோடி 3.0 அமைச்சரவையில் மாநில வாரியாக இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் இருந்து 10 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், ஹர்தீப் சிங் பூரி, பங்கஜ் சவுத்ரி, அனுப்ரியா படேல், ஜிதின் பிரசாத், ஜெயந்த் சவுத்ரி, பி.எல்.வர்மா, கமலேஷ் பாஸ்வான் மற்றும் எஸ்.பி. சிங் பாகேல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அடுத்ததாக பீகாரில் இருந்து கிரிராஜ் சிங், நித்யானந்த் ராய், சதீஷ் துபே, சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி, ராம் நாத் தாக்கூர், லாலன் சிங் மற்றும் ராஜ் பூஷன் சவுத்ரி ஆகியோர் உள்ளனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமைச்சர்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், பிரதாப் ராவ் ஜாதவ், ரக்ஷா கட்சே மற்றும் ராம் தாஸ் அத்வாலே ஆகியோரும், கர்நாடக அமைச்சர்களில் நிர்மலா சீதாராமன், எச்டி குமாரசாமி, பிரகலாத் ஜோஷி, ஷோபா கரந்த்லாஜே, வி சோமன்னா ஆகியோர் அடங்குவர். அமித் ஷா, எஸ் ஜெய்சங்கர், மன்சுக் மாண்டவியா, சிஆர் பாட்டீல் மற்றும் நிமுபென் பாம்பானியா ஆகியோர் குஜராத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானாவில் இருந்து மனோகர் லால் மற்றும் ராவ் இந்தர்ஜித் சிங், தெலுங்கானா அமைச்சர்களில் ஜி கிஷன் ரெட்டி மற்றும் பண்டி சஞ்சய் ஆகியோர் உள்ளனர். அசாமின் அமைச்சர்களாக சர்பானந்தா சோனோவால் மற்றும் பபித்ரா மார்கெரிட்டா,
ஜார்கண்ட் மாநிலத்தை சந்திரசேகர் சவுத்ரி மற்றும் அன்னபூர்ணா தேவி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். பஞ்சாப் மாநில அமைச்சராக ரவ்னீத் சிங் பிட்டு, உத்தரகாண்ட் அமைச்சராக இருப்பவர் அஜய் தம்தா, டெல்லியின் பிரதிநிதி ஹர்ஷ் மல்ஹோத்ரா, தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர் எல் முருகன், கேரளா சார்பில் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார், அருணாச்சல பிரதேசத்தின் அமைச்சராக கிரண் ரிஜிஜு, கோவாவின் பிரதிநிதியாக ஸ்ரீபாத் நாயக், ஜம்மு & காஷ்மீர் அமைச்சராக ஜிதேந்திர சிங், ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து ஜேபி நட்டா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications