Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக அரங்கில் மாஸ் காட்டிய இந்தியா! அடுத்து ஜி-20 தலைமை பொறுப்பு யாருக்கு செல்லும்! இது ஏன் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகமே வியக்கும் வகையில் ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள நிலையில், அடுத்து இந்த அமைப்புக்குத் தலைமை ஏற்கப் போவது யார்.. அடுத்த உச்சி மாநாடு எங்கு நடக்கும் என்பது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

ஜி20 உச்சி மாநாடு இரண்டு நாட்களாக டெல்லியில் நடந்து வருகிறது. உலகின் பல டாப் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்த நிலையில், அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

 G20 Summit Who will be the next G20 President after India and how it will be decided

இந்த உச்சி மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் இணைக்கப்பட்டது ரொம்பவே முக்கிய முடிவாகப் பார்க்கப்பட்டது. இது ஆப்பிரிக்க நாடுகளின் அடுத்தகட்ட வளர்ச்சியை உறுதி செய்யும்.

உச்சி மாநாடு: இந்தியா இந்த உச்சி மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்தது. இந்த ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ என உலகின் டாப் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மட்டும் இதில் கலந்து கொள்ளவில்லை.

உலகில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் இந்த ஜி20 அமைப்பிற்குத் தலைமை ஏற்பது என்பது எந்தவொரு நாட்டிற்கும் தனி கவுரவம் தான். கடந்தாண்டு இந்தோனேசியா தலைமை பொறுப்பிற்கு வந்த நிலையில், இந்தாண்டு இந்தியா தலைமைக்கு வந்தது. இந்தியாவின் தலைமை பொறுப்பு விரைவில் முடிகிறது. அடுத்த எந்த நாடு தலைமை ஏற்க உள்ளது. அதை எப்படி முடிவு செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

ஜி20 அமைப்பு: 1990களில் ஆசியாவில் மிக பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கு ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி 1990இல் ஜி20 என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள்.

இருப்பினும், இந்த உறுப்பு நாடுகளை ஒரே அணிக்குக் கொண்டு வர ஒரு நாடு தலைமை பொறுப்பு ஏற்க வேண்டும். சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு தலைமை பொறுப்பில் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஜி20 நாடுகள் மொத்தம் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குழுவில் இருக்கும் ஒரு நாடு தலைமை பொறுப்புக்கு வரும். ஜி20 உறுப்பு நாடுகள் இணைந்து இதை முடிவு செய்யும்.

அடுத்து யார்: அதன்படி கடந்தாண்டு இந்தோனேசியா தலைமை பொறுப்பில் இருந்த நிலையில், இந்தாண்டு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதேபோல அடுத்தாண்டு பிரேசில் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளது.

கடந்த 2022 டிசம்பர் 1ஆம் தேதி இந்தியா அதிகாரப்பூர்வமாகத் தலைமை பொறுப்புக்கு வந்தது. வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை இந்தியா தலைமை பொறுப்பில் இருக்கும். இருந்த போதிலும், இன்றைய தினமே தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஜி20 உச்சி மாநாட்டில் முக்கிய நிகழ்வாக இருக்கும்.

அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவை இந்த ஜி20இல் இருக்கிறது. இதில் இப்போது ஆப்பிரிக்க யூனியனும் இணைந்துள்ளது. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 85 சதவீதமும், உலக வர்த்தகத்தில் 75 சதவீதமும், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கும் இங்கே ஜி20 உறுப்பு நாடுகளில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+