டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஊடுருவல்காரர்கள் மீது ராகுலுக்கு எவ்வளவு பாசம்.. அப்ப அவங்களை இத்தாலிக்கு அழைத்து செல்லட்டும்"

Google Oneindia Tamil News

டெல்லி: ஊடுருவல்காரர்கள் மீது ராகுல்காந்திக்கு பாசம் இருந்தால் அவர்களை இத்தாலிக்கு அழைத்து செல்லட்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திரிணமூல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சில மாநிலங்களில் வன்முறைகளும் நடந்துள்ளன. இதனால் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

வங்கிகள் இந்த 3 'சி' க்களுக்கு பயப்பட வேண்டியதில்லை.. தாராளமா கடன் கொடுங்க.. நிர்மலா சீதாராமன் வங்கிகள் இந்த 3 'சி' க்களுக்கு பயப்பட வேண்டியதில்லை.. தாராளமா கடன் கொடுங்க.. நிர்மலா சீதாராமன்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில் பொய்களை பேசி நாட்டை துண்டாட காங்கிரஸ் விரும்புகிறது. சட்டவிரோதமாக குடியேறுவோர், ஊடுருவல்காரர்கள் மீது ராகுல் காந்திக்கு பாசம் இருந்தால் அவர்களை இத்தாலிக்கு அழைத்து செல்லலாம்.

குடியுரிமை சட்டம்

குடியுரிமை சட்டம்

அஸ்ஸாமின் அடையாளம், கலாச்சாரம் ஒருபோதும் அழிக்கப்படாது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை பழமையான கட்சியும் சிறிய சிறிய அமைப்புகளும் மட்டுமே எதிர்த்து வருகின்றன.

சிறுபான்மையினர்

சிறுபான்மையினர்

அச்சமான சூழலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சியின் பாவங்களை பாஜக துடைத்து வருகிறது. பாகிஸ்தானழில் உள்ள இந்துக்களும், மற்ற சிறுபான்மையினரும் இந்திய குடிமக்கள் என மகாத்மா காந்தி கூட கூறியிருந்தார்.

மத ரீதியில்

மத ரீதியில்

மேலும் அவர்கள் இந்தியாவுக்கு திரும்பினால் அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என கூறியிருந்தார். மத ரீதியிலான மக்களை பிரிக்க காங்கிரஸ் விரும்புகிறது என கிரிராஜ் தெரிவித்தார்.

English summary
Union Minister Giriraj Singh says that Congress spreads unnecessary confusion over Citizenship Amendment act. If Rahul Ji loves infiltrators, he can take them to Italy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X