ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்.. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
டெல்லி: கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், ஏசி பெட்டிகளில் பயணிக்க விரும்பும் ரயில் பயணிகளுக்கு 'எகனாமி' வகுப்பு மீண்டும் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகுப்பில், 8 சதவீதம் வரை குறைவான கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் 'எகனாமி' வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகுப்புக்கான பயண கட்டணம், வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பயண டிக்கெட் கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியிருந்தது.
சிறப்பான, மலிவான ஏ.சி. ரயில் பயணத்தை அளிப்பதற்காக இந்த வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் 72 படுக்கைகளும், 'எகனாமி' வகுப்பில் 80 படுக்கைகளும் இருந்தன. அதாவது 'எகனாமி' வகுப்பு பயணிகளுக்கு போர்வை மட்டும் வழங்கப்படாது. மற்றபடி எல்லாம் ஒன்று தான். அதேநேரம் 3 அடுக்கு வகுப்பு கட்டணத்தை ஒப்பிடும் போது ஏசி எகனாமிக்கு கொஞ்சம் குறைவு ஆகும்.

பயணிகள்
ரயில்வேக்கு எகனாமி வகுப்பு அறிமுகம் மூலம் ஒரே ஆண்டில் ரூ.231 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 15 லட்சம் பயணிகள் அந்த வகுப்பில் பயணம் செய்தனர். அதன்மூலம் மட்டும் ரூ.177 கோடி வருவாய் கிடைத்ததாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கட்டணம்
இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 'எகனாமி' வகுப்பு, வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளுடன் இணைக்கப்பட்டது. ஆனால் அந்த வகுப்பு பயணிகளுக்கும் போர்வை வழங்கப்படவிலை. அதேநேரம் போர்வைக்கான கட்டணமாக ரூ.60 முதல் ரூ.70 வரை பயணிகள் கூடுதலாக செலுத்த வேண்டி இருந்தது. இரு பிரிவினருக்கும் கட்டணம் சமமாகி விட்டது.

ரயில்வே அறிவிப்பு
இந்தநிலையில், 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் மீண்டும் 'எகனாமி' வகுப்பு அமல்படுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் புதன்கிழமை அறிவித்தது. இதன்மூலம், கடந்த நவம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. 2021-ம் ஆண்டு 'எகனாமி' வகுப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என ரயில்வே கூறியுள்ளது. அதனால், வழக்கமான கட்டணத்தை விட 'எகனாமி' வகுப்பு பயணிகளுக்கு 6 முதல் 8 சதவீதம் வரை கட்டணம் குறைவாக இருக்கும். அதே சமயத்தில், அவர்களுக்கு போர்வை வழங்கப்படும் என்றும் ரயில்வே கூறியுள்ளது.

ஏசி பெட்டிகள்
இந்த அறிவிப்பால், ஏற்கனவே ஆன்லைன் மூலமாகவும், டிக்கெட் கவுண்ட்டர் மூலமாகவும் முன்பதிவு செய்த 3 அடுக்கு ஏ.சி. பெட்டி பயணிகள், கூடுதல் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் (ரீபண்ட்) என்று ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது, ரயில்களில் வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 11 ஆயிரத்து 277-ம், 'எகனாமி' வகுப்பு பெட்டிகள் 463-ம் இருக்கின்றன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications