ஆளுநர் செய்தது அநீதி.. 142வது பிரிவை கையில் எடுத்த உச்ச நீதிமன்றம்.. பேரறிவாளன் விடுதலை ஆனது எப்படி?
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வதற்காக உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரம் 142-வது பிரிவைச் செயல்படுத்தி உள்ளது.
Recommended Video
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது சிறையில் இருந்த 2014ல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை முன்னதாக ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தற்போது பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தூக்கு தண்டனை குறைப்பு
முன்னதாக தூக்கு தண்டனை வழக்கில் இவர்களின் கருணை மனு நிலுவையில் இருந்தது. நீண்ட காலம் கருணை மனு நிலுவையில் இருப்பது அநீதிக்கு சமமானது என்று கூறி இவர்களின் தூக்கு தண்டனை ஆயுள் தந்தையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து ஆயுள் தண்டனையில் இருந்து, தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேரறிவாளன் 2016ல் மனுதாக்கல் செய்து, அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்.

பெயில்
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் பேரறிவாளனுக்கு இந்த வழக்கில் பெயில் வழங்கினார். இதையடுத்து இன்று பேரறிவாளனை விடுதலை செய்து தீர்பளித்துள்ளனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது உச்ச நீதிமன்றம் சில முக்கியமான விஷயங்களை தெரிவித்துள்ளது. அதன்படி பேரறிவாளன் வழக்கில் ஆளுநர் செய்த தாமதம் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டது.

விடுதலை
அவரின் விடுதலை மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியது. அமைச்சரவை எடுத்த முடிவை அவர் ஏற்று இருக்க வேண்டும். பேரறிவாளனை விடுதலை செய்ய உரிய பரிசீலனைக்குப் பின் மாநில அரசு முடிவு. ஆனால் ஆளுநர் இதை ஏற்காமல் இருந்தார். 28 மாதங்கள் இதில் முடிவு எடுக்காமல் இருந்தது தவறு. அரசியல் சாசனத்தின் 161-வது மாநில அரசுக்கான சிறப்புரிமையை கொண்டது; ஆளுநர் இதற்கு கட்டுப்பட்டவர்; மீறி நடப்பது தவறு. அவர் காலதாமதம் செய்தது தவறு.

கண்டிப்பு
இதனால் அவரை விடுதலை செய்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. 142 பிரிவு என்பது உச்ச நீதிமன்றம் தனக்கு முன்பில் இருக்கும் வழக்கில் முழு நீதியை வழங்க முடியும். இந்தியாவிற்குள் ஒரு விவகாரத்தில் முழு நீதி கிடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருதினால், இந்த பிரிவை பயன்படுத்தி அதில் தீர்ப்பு வழங்க முடியும். ஒரு உதாரணமாக ஒரு நபருக்கு நீதி கிடைக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருதினால் இந்த சட்ட பிரிவை பயன்படுத்தி தீர்ப்பு வழங்கி நீதி கொடுக்க முடியும்.

நீதிமன்ற அதிகாரம்
அதைத்தான் உச்ச நீதிமன்றம் தற்போது பயன்படுத்தி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த விடுதலை தீர்மானத்தை ஆளுநர் இத்தனை நாட்கள் கிடப்பில் போட்டு இருந்தார். சமீபத்தில் ஆளுநர் இதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. இந்த நிலையில்தான் பல நாட்களாக இவரின் விடுதலையில் முடிவு எடுக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது. இதனால் வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதாகும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications