டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐடி, பிபிஓ ஊழியர்கள்...டிசம்பர் 31 வரை வீட்டில் இருந்து செய்யலாம்...புது உத்தரவு!!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக வீடுகளில் இருந்து வேலை செய்ய ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களுக்கு ஜூலை 31ஆம் தேதி வரை மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. இந்த நிலையில் டிசம்பர் வரை வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான கால அவகாசத்தை நீடித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    IT ,BPO ஊழியர்களுக்கு டிசம்பர் வரை Work from home-க்கு அனுமதி - மத்திய அரசு

    கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் உலக நாடுகளில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் வீடுகளில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கியுள்ளது. அவர்கள் தற்போது வீட்டில் இருந்தவாறு பணிபுரிந்து வருகின்றனர்.

    Govt has extended work from home relaxation to IT, BPO companies till Dec 31

    பிபிஓ நிறுவனங்களில் பணிபுரிவர்கள் பொதுவாக அலுவலகங்களுக்கு சென்று பணிபுரிந்து வந்தனர். தற்போது இவர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலருக்கும் அவர்களது நிறுவனத்தின் சார்பில் கம்ப்யூட்டர் வழங்கப்படவில்லை. அவர்கள் தங்களது சொந்த கம்ப்யூட்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த கம்ப்யூட்டர்களுக்கும் நிறுவனம் மாதம் இவ்வளவு என்று ஒரு குறிப்பிட்ட வாடகையையும் கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில்தான் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான அனுமதியை ஐடி மற்றும் பிபிஓ ஊழியர்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று இரவு ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளது.

    சி.பி.ராதாகிருஷ்ணன் பூச்சாண்டி காட்டுகிறாரா...? பேட்டியை குறிப்பிட்டு கொதித்த அதிமுக சீனியர்கள்சி.பி.ராதாகிருஷ்ணன் பூச்சாண்டி காட்டுகிறாரா...? பேட்டியை குறிப்பிட்டு கொதித்த அதிமுக சீனியர்கள்

    தற்போது ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களில் 85 சதவீதம் பேர் தங்களது வீடுகளில் இருந்துதான் வேலை செய்கின்றனர். அலுவலகத்துக்கு சென்றேதான் ஆக வேண்டும் என்று இருப்பவர்கள் மட்டும் அலுவலகம் செல்கின்றனர். கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி வரை வீட்டில் இருந்து வேலை செய்ய மத்திய தகவல் தொழில்நுட்பம் அனுமதித்து பின்னர் ஜூலை 31 ஆம் தேதி வரை அனுமதித்து இருந்தது. தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இதுவரைக்கும் 11.55 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 28,084 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    English summary
    Govt has extended work from home relaxation to IT, BPO companies till Dec 31
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X