இனி இஷ்டத்திற்கு வர முடியாது.. செக் வைத்த மத்திய அரசு! ஊழியர்களுக்கு பறந்த மேஜர் வார்னிங்
டெல்லி: மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் பல லட்சக்கணக்கான ஊழியர்களுக்கும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் பணிக்கு சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வரத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மேஜர் வார்னிங் ஒன்றை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை விடுத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் காலை 9.15 மணிக்கு முன்பாக அலுவலகங்களுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.

வருகை பதிவு: காலை 9.15 மணிக்கு வந்து இருப்பதை வருகை பதிவேடு மூலமாக உறுதி செய்ய வேண்டும் என்றும் காலதாமதமாக வந்தால் அரை நாள் சாதாரண விடுப்பாக கழிக்கப்படும் என்ற வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான பதிவேட்டில் வருகை நேரத்தை குறிப்பிடுவதற்கு பதிலாக பயோமெட்ரிக்கில் பஞ்ச் செய்து வருகையை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
குறிப்பிட்ட நாளில் ஊழியரால் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டால் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், சாதாரண விடுப்பை பெற அனுமதி கோர வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்கிறதாம். கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு மத்திய அரசு ஊழியர்கள் பலரும் பயோ மெட்ரிக் பயன்படுத்துவது இல்லை என்று சொல்லப்படுகிறது.
மூத்த ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும்: கடந்த 4 ஆண்டுகளாக இந்த நிலையே நீடித்து வரும் நிலையில், தற்போது ஊழியர்கள் சரியான நேரத்தில் வருகை தருவதை உறுதி செய்யும் விதமாக இந்த கிடுக்கிப்பிடி உத்தரவை போட்டு இருக்கிறது மத்திய அரசு. தங்கள் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் சரியான நேரத்தில் வருகை தருவதை மூத்த ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களை பொறுத்தவரை அதன் பணி நேரம் என்பது காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆகும். ஆனால், ஊழியர்கள் பலரும் காலதாமதமாக வருவதோடு முன் கூட்டியே கிளம்பி செல்வதாகவும் குறிப்பாக பொதுமக்களை கையாளும் துறையில் உள்ள ஊழியர்கள் கூட இப்படி நடந்து கொள்வதால் மக்களுக்கு ஏற்படும் அசவுகர்யங்களை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
பணியாளர்கள் ஆதங்கம்: அதே வேளையில், பணி நேரத்தை தாண்டியும் பணி செய்து வருவதாகவும், கொரோனாவிற்கு பிறகு பெரும்பாலான கோப்புகள் டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்யப்படுவதால் விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்து கூட பணி செய்ய வேண்டிய நிலை உள்ளதாக அரசு ஊழியர்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்று காலம்: கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி ஆட்சி முதல் முறையாக அமைந்ததும் அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறையிலான வருகைப்பதிவு முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த சிஸ்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் குறைந்த பிறகு பிப்ரவரி 2022-ல் மீண்டும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு உறுதி செய்வது கொண்டு வரப்பட்டது. எனினும், சில ஊழியர்கள் தாமதமாக வந்து விட்டு முன் கூட்டியே செல்வதை கடைபிடிப்பதை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இந்த புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன .
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications