Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடன்காரங்க.. என்னையும் இழுத்துவிட்டுட்டாங்க.. ரொம்ப அவமானமா இருக்கு! பாஜக எம்பி ஹர்ஷவர்தன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக எம்பி ரமேஷ் பிதூரி எதிர்க்கட்சி எம்பியான இஸ்லாமியரை பார்த்து தீவிரவாதி என்றும் கொச்சையான வார்த்தைகளையும் நாடாளுமன்றத்திலேயே பேசிய போது அருகில் உட்கார்ந்து சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்ததாக எதிர்க்கட்சிகள் முன்னாள் அமைச்சர் ஹர்ஷவர்தன் மீது குற்றச்சாட்டின. இந்நிலையில் தனக்கு சரியாக கேட்கவில்லை என ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி (இன்று) வரை நடந்தது. இதில் கடந்த 19-ம் தேதி மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நேற்றைய முன்தினம் லோக்சபாவிலும், நேற்று ராஜ்யசபாவிலும் அனைவர் ஆதரவோடு நிறைவேறியது.

Harsh Vardhan, who was seen grinning when a BJP MP was abusing a member of parliament, clarifies

இந்த சூழலில் நேற்று நடைபெற்ற லோக்சபா கூட்டத்தொடரில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களை எம்பிக்கள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள்தான் காரணம் என்பதால், எம்பிக்கள் அனைவரும் பாராட்டி பேசினார்கள்.

அப்போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலிக்கு எதிராக பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி பேசிய விஷயம் நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத ஒன்று. அனைத்து எம்பிக்களையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தெற்கு டெல்லி தொகுதி பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை நோக்கி, 'ஏய்.. இஸ்லாமிய தீவிரவாதி' என்றும், 'பயங்கரவாதி' என்றும் கூறினார். மேலும் ஆபாச வார்த்தைகளில் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

Harsh Vardhan, who was seen grinning when a BJP MP was abusing a member of parliament, clarifies

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி அனைவர் முன்பும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதால் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்டார். அதேநேரம் சபாநாயகர் ஓம் பிர்லாவும் பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரியை கடுமையாக கண்டித்ததுடன், எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.இனி ஒருமுறை இப்படி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதேநேரம் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரி இந்த சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரியின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் பாஜக எம்பி ரமேஷ் பிதூரி எதிர்க்கட்சி எம்பியான இஸ்லாமியரை பார்த்து தீவிரவாதி என்றும் கொச்சையான வார்த்தைகளையும் நாடாளுமன்றத்திலேயே பேசிய போது அருகில் உட்கார்ந்து சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்ததாக எதிர்க்கட்சிகள் முன்னாள் அமைச்சர் ஹர்ஷவர்தன் மீது குற்றச்சாட்டின. ஹர்ஷவர்தனையும் எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் ரமேஷ் பிதூரியின் பேச்சு தனக்கு சரியாக கேட்கவில்லை என்று ஹர்ஷவர்தன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " பாஜக எம்பி ரமேஷ் பிதூரி பேசிய விவகாரத்தில் ட்விட்டரில் எனது பெயர் டிரெண்டாகி வருவதை நான் கண்டேன். இந்த விவகாரத்தில் நமது மூத்த அமைச்சர் ராஜ்நாத்சிங் யாராலும் மன்னிக்க முடியாத வார்த்தை என்று கண்டித்துள்ளார்.

இன்று சமூக ஊடகங்களில் எனக்கு எதிராக எழுதும் எனது முஸ்லிம் நண்பர்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். எந்த ஒரு சமூகத்தின் உணர்வுகளையும் புண்படுத்தும் இத்தகைய கீழ்த்தரமான வார்த்தைகளை பேசும் போது, நான் வெறுமென பார்த்துக் கொண்டிருப்பேன் என்று நம்புறீங்களா? அப்படி அவர் பேசுவதை ஜாலியாக வேடிக்கையாக கேட்டு சிரித்தேன் என்று சொல்வதெல்லாம் மோசமான பொய் மட்டுமல்ல கட்டுக்கதையும் கூட.. என்னுடைய இமேஜை காலி செய்ய வேண்டும் என்று இப்படி என்னை பற்றி எதிர்மறையாக அரசியலுக்காக செய்கிறார்கள்.

என்னுடைய 30 வருட அரசியல் வாழ்க்கையில், என்னுடைய தொகுதியில் உள்ள லட்சக்கணக்கான முஸ்லிம் சகோதர, சகோதரிகளுடன், சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சக ஊழியர்களுடன் மிகவும் பாசத்துடன் நெருக்கமாக வேலை செய்திருக்கிறேன்.

டெல்லி சாந்தினி சௌக்கின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதக் தெலியனில் பிறந்து வளர்ந்த நான்,. எனது குழந்தைப் பருவம் தொடங்கியே முஸ்லீம் நண்பர்களுடன் விளையாடி வளர்ந்தவன் நான். என்னுடன் நட்பு வட்டத்தில் இருந்த அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளின் உணர்வுகளுக்கு எப்போதும் நான் மதிப்பு அளித்தவன் என்பதை, என்னால் நிச்சயம் உறுதியுடன் சொல்ல முடியும்.

டெல்லி சாந்தினி சௌக் தொகுதியில் இருந்து எம்பியாக வெற்றி பெற்றதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன், அனைத்து சமூகங்களும் என்னை ஆதரிக்காமல் இருந்திருந்தால் ஒருபோதும் வெற்றி பெற்றிருக்க முடியாது.

சில கடன்காரங்க.. இப்படி என் பெயரையும் இழுத்துவிட்டிருப்பது மிகவும் வருத்தமாக இருக்கு... எனக்கு ரொம்ப அவமானமாகவும் இருக்கு..
ஒருவர் மோசமான வார்த்தைகளால் பேசும் போது, அதற்கு நான் சாட்சியாக இருந்தபோதும் (உண்மையில் முழு சபையும் இருந்தது), என்னால அங்கு என்ன பேசப்படுகிறது என்பதை தெளிவாகக் கேட்க முடியவில்லை. அதுதான் நிஜம்..

இப்படித்தான் இருக்க வேண்டும் என எனக்கென ஒரு பிரின்சிபிலுடன் நான் வாழ்கிறேன். அந்த கொள்கைகளில் உறுதியாகவும் இருக்கிறேன். என் நாட்டை பற்றியும், என் மக்களை பற்றியுமே எப்போது நினைப்பவன்" இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்-

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+