ஹரியானாவில் மகனுக்கு துணை சிம் பதவி.. அப்பாவிற்கு பரோல்..சிறையிலிருந்து வெளியே வந்தார் அஜய் சவுதாலா
டெல்லி: ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுத்தாலாவின் அப்பா அஜய் சவுதாலா டெல்லி திகார் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது, காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆச்சர்யமாக ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வென்றது. அதேபோல் சுயேட்சைகள் 7 இடங்களில் வென்றனர். ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 இடங்களில் வெல்ல வேண்டும்.
இதையடுத்து தொங்குசட்டசபை உருவாகி உள்ளது. ஜனநாயக் ஜனதா கட்சி மற்றும் சுயேட்சைகள் ஆகியோர் தற்போது ஹரியானாவில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறினார்கள்.

என்ன ஆட்சி
இந்த நிலையில் ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுத்தாலா, பாஜகவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். தன்னுடைய கட்சியின் 10 எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பார்கள் என்று கூறினார். இதனால் பாஜக கட்சி மீண்டும் ஹரியானாவில் ஆட்சி அமைக்க உள்ளது.

துணை முதல்வர்
இந்த நிலையில் ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுத்தாலாவிற்கு பாஜக துணை முதல்வர் பொறுப்பை அளித்துள்ளது. ஜேஜேபி கட்சியின் கோரிக்கையை அமித் ஷா உடனே ஏற்றுக்கொண்டார். முக்கிய அமைச்சர் பதவியும், துணை முதல்வர் பதவியும் ஜேஜேபி கட்சிக்கு வழங்கப்பட்டு உள்ளது.

பரோலில் விடுதலை
இந்த நிலையில் ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுத்தாலாவின் அப்பா அஜய் சவுதாலா டெல்லி திகார் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2013ம் ஆண்டு டெல்லி ஹைகோர்ட் மூலம் அஜய் சவுதாலா மற்றும் அவரின் அப்பா ஓம் பிரகாஷ் சவுதாலா இரண்டு பேரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

ஏன்
3000 பள்ளி ஆசிரியார்களை நியமித்ததில் அஜய் சவுதாலாமுறைகேடு செய்ததாகவும், இதில் லஞ்சம், சாதி பாகுபாடு உள்ளிட்ட தவறுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில் 4 வருடமாக டெல்லி திகார் சிறையில் இருந்த அஜய் சவுதாலாவிற்கு இன்று பரோல் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டி
14 நாள் பரோலில் வந்திருக்கும் அஜய் சவுதாலா தன்னுடைய மகன் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் , கட்சியை 11 மாதங்களில் என் மகன் பெரிய அளவில் வளர்த்து இருக்கிறான். எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. அவன் பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்தது நல்ல முடிவு, என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications