மக்களை அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை தொற்று.. அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட்டது ஹரியாணா!
டெல்லி: பல்வேறு மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை தொற்று நோயை அறிவிக்கப்பட்ட நோயாக ஹரியாணா மாநில அரசு பட்டியலிட்டது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து அச்சறுத்தி வரும் நிலையில் கருப்பு பூஞ்சைத என்ற தொற்று தற்போது மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது.

கருப்பு பூஞ்சை தொற்று
பொதுவாக எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்தத் தொற்று, தற்போது கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது. இந்த நிலையில் கொரோனாவுக்கு பிறகு கருப்பு பூஞ்சை தொற்றால் அதிகம் பேர் இருந்து வருகின்றனர் என்று எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

பாதிப்பு அதிகரிப்பு
இது தொடர்பாக அவர் கூறியது:- கருப்பு பூஞ்சை, அதாவது முகராமைகோசிஸ், மண், காற்று மற்றும் உணவில் கூட காணப்படுகிறது. ஆனால் இவை பொதுவாக தொற்றுநோயை ஏற்படுத்தாது. கொரோனாவுக்கு முன்பு இந்த நோய்த்தொற்றுக்கு மிகக் குறைவான பாதிப்புகள் இருந்தன. இப்போது கொரோனா காரணமாக இ தன் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

நுரையீரலை பாதிக்கும்
இந்த பூஞ்சை தொற்று ஏற்பட்ட 23 நோயாளிகளுக்கு எய்ம்ஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெவ்வேறு மாநிலங்களில் 500-க்கும் மேற்பட்ட கருப்பு பூஞ்சை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நோய் கண் ,மூக்கு, சுற்றுப்பாதையை பாதிக்கும். இதனால் கண் பலவீனமடையும். இந்த நோய் நுரையீரலையும் பாதிக்கும் என்று ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

ஹரியாணா பட்டியலிட்டது
இதற்கிடையே இந்தியாவில் முதல் முறையாக, கறருப்பு பூஞ்சை தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக பட்டியலிட்டுள்ளது ஹரியாணா மாநில அரசு. கடந்த சில நாட்களில் அங்கு 40 பேருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாநில அரசு அறிவிக்கப்பட்ட நோய் என்று எந்தவொரு நோயையும் பட்டியலிட்டால், அந்த நோய் குறித்தத் தகவல்களை அனைத்து அரசு, தனியார் மருத்துவமனை, மருத்துவத் துறையின் உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications