கொரோனா பரவல்.. அதிகரிக்க இதுதான் காரணம்.. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு? ஹர்ஷ் வர்தன் புதிய விளக்கம்
டெல்லி: பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் இருப்பதே கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கொரோனாவின் கோரப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து விவாதிக்க இன்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசிக்கக் கூட்டம் நடைபெற்றது.

காரணம் என்ன
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நிலைமை தற்போது கட்டுக்குள் இருக்கிறது. பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்காமல் இருப்பதே வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணம் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், தேர்தல்கள், திருமணங்கள், விவசாயிகள் போராட்டம் ஆகியவை காரணமாகவும் வைரஸ் பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார்.

அதிகம் தான்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கடந்த இரண்டு மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது உண்மை தான். இருந்தாலும், நமது ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. குணமடைந்து வருபவர்களின் விகிதம் 92.38%ஆகவும் உயிரிழப்பவர்களின் விகிதம் 1.30%ஆகவுமே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

யார் பாதிக்கப்படுகிறார்கள்
கடந்த பிப்ரவரி மாதம் முதல் மகாராஷ்டிரா (25%), சத்தீஸ்கர் (14%) மாநிலங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் அதிகமாக உள்ளது. நாட்டில் 15 முதல் 44 வயது வரை இருக்கும் மக்களிடையே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதேநேரம், சத்தீஸ்கர், குஜராத், ஹிமச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிகளவில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்வது பாரட்டதக்கது என்றும் அவர் கூறினார்.

மராட்டிய அரசு கோரிக்கை
முன்னதாக மகாராஷ்டிராவில் இன்னும் சில தினங்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் மட்டுமே உள்ளதாக மராட்டிய சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் டோப் குறிப்பிட்டிருந்தார். மும்பையில் இன்னும் மூன்று நாட்களுக்குத் தேவையான தடுப்பூசிகள் மட்டுமே இருப்பதாகவும் மாநிலத்தில் பல இடங்களில் இதே நிலை தொடர்வதால், தடுப்பூசி மையங்களை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ராஜேஷ் டோப் கூறினார். தற்போதுள்ள அவசர நிலையைப் புரிந்துகொண்டு விரைவாகத் தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும் ராஜேஷ் டோப் கோரிக்கை விடுத்தார்.

அப்படியொரு நிலை வராது
இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், எந்த மாநிலத்திலும் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. அப்படியொரு நிலை ஏற்பட நாங்கள் விட மாட்டோம். அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான தடுப்பூசிகளை நாங்கள் வழங்கியே வருகிறோம். இது குறித்தும் அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்றபடி கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும். அதில் எவ்வித சிக்கல் இருக்காது என்று அவர் உறுதி அளித்தார்.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்தாண்டு வைரஸ் பரவல் தொடங்கியது முதல், தினசரி கொரோனா பாதிப்பு இந்தளவு அதிகரித்தது இதுவே முதல்முறையாகும். இதுவரை நாட்டில் 1.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 1.66 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 56 ஆயிரம் பேரும், தமிழகத்தில் 12 ஆயிரம் பேரும் உயிரிழந்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications