தலைநகரில் விடிய விடிய கொட்டிய கனமழை.. ஸ்தம்பித்து போன டெல்லி! விமான சேவை கடும் பாதிப்பு!
டெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முதல் காலை வரை விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் முட்டளவுக்கு தேங்கியது. கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக பல்வேறு விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்படுவதிலும் தாமதம் எற்பட்டது. 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.30 மணிக்கு பிறகு படிப்படியாக விமான சேவை சீராக தொடங்கியுள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. கனமழையால் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. பிரதான சாலைகளில் முட்டளவுக்கு மேல் தண்ணீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் தவித்தனர்.

டெல்லியில் உள்ள மோதி பாக், மிண்டோ சாலை, டெல்லி கண்டோன்மெண்ட் மற்றும் தீன் தயாள் உபத்யாய் மார்க் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்படுவதிலும் தாமதம் எற்பட்டது. 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.30 மணிக்கு பிறகு படிப்படியாக விமான சேவை சீராக தொடங்கியுள்ளது. தற்போது தலைநகர் டெல்லியில் வெப்ப நிலை 22 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.
டெல்லி மட்டும் இன்றி உத்தரகாண்ட் ஹரியானாவில் கனமழை பெய்தது. மோசமான வானிலை நிலவும் நிலையில், டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஏர் இந்தியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் எடுத்த முடிவு.. பெங்களூர், மும்பை பயணிகளுக்கு அதிர்ச்சி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications