கங்கை நீர் குளிக்க கூட பாதுகாப்பானது கிடையாது.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட ஷாக் டேட்டா
டெல்லி: உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரிவேணி சங்கம கங்கையில் தினமும் 1.6 கோடி லிட்டர் மனித கழிவுகள் கலக்கப்படுவதால், இந்த நீர் குளிக்க பாதுகாப்பானது கிடையாது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிய வந்திருக்கிறது.
பிரயாக்ராஜில் கங்கையும், யமுனையும், சரஸ்வதியும் (புராணங்களில் குறிப்பிட்டுள்ள கற்பனை நதி) ஒன்று கூடுகின்றன. இந்த பகுதிதான் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது.

இந்த திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. கோடிக்கணக்கான பக்தர்கள் இந்த நதியில் புனித நீராடி வருகின்றனர். எனவே இதில் தினமும் 1.6 கோடி லிட்டர் மனித கழிவுகள் கலப்பதாகவும், ஆகவே இது குளிக்க பாதுகாப்பான நீர் கிடையாது என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.
அதாவது நாம் பயன்படுத்தும் தண்ணீர் சுத்தமானதா? என்பதை தெரிந்துக்கொள்ள, தண்ணீரில் 'உயிரியல் ஆக்ஸிஜன் தேவை' (biological oxygen demand-BOD) அளவை கணக்கிட வேண்டும். குடிநீரில் இந்த அளவு 1 லிட்டருக்கு 1 மி.கி அளவுக்குதான் இருக்க வேண்டும். இதே குளிக்கும் நீர் எனில், லிட்டருக்கு 3 மி.கி மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், திரிவேணி சங்கம கங்கையில், இந்த அளவைவிட அதிகமாக BOD இருப்பதால், அந்த தண்ணீர் குளிக்க ஏற்றது கிடையாது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் டேட்டாவை வெளியிட்டிருக்கிறது.
கடந்த ஜனவரி 13ம் தேதி கும்பமேளா தொடங்கியது. அன்றைய தினம் BOD அளவு 3.94.
மகர சங்கராந்தியான ஜனவரி 14ம் தேதி - 2.28
ஜனவரி 15ம் தேதி - 1
ஜனவரி 16ல் - 15.05
ஜனவரி 18ல் - 4.6
ஜனவரி 19ல் - 5.29
ஜனவரி 24ல் - 4.08
ஜனவரி 29ல்(மௌனி அமாவாசை) - 3.26
பிப்ரவரி 16ல் - 5.09
பிப்ரவரி 18ல் - 4.6
பிப்ரவரி 19 (நேற்று) - 5.29
என திரிவேணி சங்கம கங்கையில் BOD அளவு பதிவாகியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. இந்த நீரில் குளிக்கும்போது, காலரா, டைபாய்டு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மட்டுமல்லாது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகளும் இந்த தண்ணீர் இருக்க கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மட்டுமல்லாது இந்த நீரில் மீத்தேன், அம்மோனியா மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற நச்சு வாயுக்களின் ஆகியவை இருக்கும் என்பதால், நீரை குடித்தால் புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு மற்றும் நரம்பியல் கோளாறுகள் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல குடிப்பதற்கும் ஏற்றது என்று அம்மாநில சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார்.
மத்திய அரசின் தகவல்கள் குறித்தும், யோகி ஆதித்யநாத்தின் பேச்சு குறித்தும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications