நீட் தேர்வில் முறைகேடு நடக்கல.. 1600 மாணவர்களின் புகாரை உயர்மட்டக் குழு விசாரிக்கும்: NTA விளக்கம்!
டெல்லி: நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என தேசிய தேர்வு முகமை இயக்குநர் சுபோத் குமார் சிங் விளக்கம் அளித்துள்ளார். தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்களில் 1,600 மாணவர்களுக்கே பிரச்சினை என்றும், அவர்கள் புகார்கள் குறித்து உயர்மட்ட குழு விசாரணை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு 4,750 மையங்களில் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்று நீட் தேர்வு எழுதினர். 13 மொழிகளில் 720 மதிப்பெண்களுக்கு அத்தேர்வு நடைபெற்றது.

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, நீட் தேர்வு வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை என முறைகேடு சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை தேசிய தேர்வு முகமை மறுத்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற்றது. நீட்தேர்வைப் பொறுத்தவரை ஒரு கேள்விக்கு சரியாக விடையளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறாக விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண் முறையில் 1 மதிப்பெண் மைனஸ் ஆகும்.
இப்படி கணக்கிட்டால் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடையளித்தவர்களுக்கு 720 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரே ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தாலும், அதற்கான நான்கு மதிப்பெண்கள் மற்றும் நெகடிவ் மார்க்காக 1 மதிப்பெண் என 5 மதிப்பெண்கள் கழிக்கப்படும். அந்த வகையில் முழு மதிப்பெண்ணுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளவர்கள் 715 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், இந்த ஆண்டில் சில மாணவர்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்களை பெற்றது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை, "தேர்வு நேரத்தில் சில நிமிடங்கள் ஏதேனும் காரணங்களால் நேரம் வீணானால், அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டது" என்று தெரிவித்தது.
ஆனால், யார் யார் விண்ணப்பித்தனர், எதன் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என என்.டி.ஏ விளக்கம் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய தீர்வை அளிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், நீட் தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் என்.டி.ஏவுக்கு கடிதம் எழுதினர். மேலும், சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
வடமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்குவது முதல் வினாத்தாள் வழங்குதல் வரை நீட் தேர்வில் பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன. தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட தமிழகத்தில் இருந்து இதற்கு வலுவான குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில், இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை இயக்குநர் சுபோத் குமார் சிங், "நீட் தேர்வு முறைகேடு தொடர்பான புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரிக்கப்படும். தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். நீட் தேர்வு நடைபெற்ற 4 ஆயிரத்து 750 மையங்களில் 6 தேர்வு மையங்களில்தான் முறைகேடு தொடர்பாக பிரச்சனை நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்தப் புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். அதன்படி யு.பி.எஸ்.சி முன்னாள் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை வழங்கும். 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 1600 மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நீட் தேர்வில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. வினாத்தாள் கசிவு எதுவும் நிகழவில்லை. தேர்வு தொடங்கிய 2 மணி நேரத்திற்குப் பிறகு தான் வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. நீட் தேர்வின் முழு செயல்முறையும் மிகவும் வெளிப்படையானது" எனத் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications