பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம்- உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்க கோரி பத்திரிகையாளர் இந்து என். ராம் வழக்கு
டெல்லி: நாட்டையே அதிர்ச்சி அடைய வைத்துள்ள பெகாசஸ் ஸ்பைவேர் மூலமான ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இஸ்ரேலின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் உலக நாடுகளில் சர்ச்சையாகி இருக்கிறது. இந்தியாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பல நூறு பேரின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டதும் அம்பலமானது.
இதனால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பெகாசஸ் ஒட்டு கேட்க உத்தரவிட்டது யார்? என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வி. பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரத்தில் தொடர்பும் இல்லை- விசாரணையும் இல்லை என்கிறது மத்திய அரசு.

உச்சநீதிமன்றத்தில் வழக்குகள்
இந்த விவகாரத்தால் நாடாளுமன்ற நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்திலும் ஏற்கனவே பெகாசஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

பத்திரிகையாளர்கள் வழக்கு
இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர்களான இந்து என். ராம் மற்றும் சசிகுமார் ஆகியோர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மனுவில், பெகாசஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

மாஸ் உளவு பார்ப்பு
மேலும் பெகாசஸ் உளவு மென்பொருளானது பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக நாடுகளுக்கு வழங்க உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் என்கிறது இஸ்ரேல். ஆனால் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல நூறு பேரை மொத்தமாக உளவு பார்க்க இந்த மென்பொருளை பயன்படுத்தி இருக்கின்றனர். இது ஜனநாயக அமைப்பை சீர்குலைப்பது. தனி மனித சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் பறிப்பதாகும்.

விசாரணை நடத்த கோரிக்கை
ஆகையால் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்த ஒட்டு கேட்பு விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications