லாக்டவுனால் இந்தியாவில் சிக்கிய வெளிநாட்டினர்.. விசா காலத்தை மே 3 வரை நீட்டித்த உள்துறை
டெல்லி: லாக்டவுனால் இந்தியாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரின் விசா காலத்தை மே 3 வரை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.
Recommended Video
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்துகளான விமான சேவை, ரயில், பேருந்து ஆகியவை இயங்கவில்லை. இதனால் பலர் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

அது போல் சுற்றுலாவுக்காகவும் பணி நிமித்தமாகவும் இந்தியா வந்த வெளிநாட்டினரின் விசா காலம் முடிவடைந்த நிலையில் போக்குவரத்து முடக்கப்பட்டதால் அவர்களால் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியவில்லை.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடையாலும் போக்குவரத்து தடையாலும் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினரின் வழக்கமான விசா, ஈ விசா உள்ளிட்டவைகள் மே 3 நள்ளிரவு வரை எந்தவித கட்டணமும் இன்றி நீட்டிக்கப்படுகிறது.
இதற்காக இணையதளத்தில் வெளிநாட்டினர் விண்ணப்பிக்க வேண்டும். பிப் 1 முதல் மே 3 வரை விசா முடிவடையும் வெளிநாட்டினர் கேட்டுக் கொண்டால் மே 17 வரை அதாவது 14 நாட்கள் வரை எந்தவித அபராதமும் இன்றி நீட்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications