டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேற வழி இல்லை.. விவசாயிகள் மீது டெல்லி போலீஸ் தடியடி நடத்தியது சரியே.. உள்துறை அமைச்சகம் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு எதிராக போலீஸார் எடுத்த நடவடிக்கை நியாயமானது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர போலீஸாருக்கு வேறு வழி இல்லை என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் 60 நாட்களுக்கு மேலாக வேளாண் சட்டங்களை எதிர்த்தும் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர்.

Home Ministry justifies police action against farmers

அப்போது டெல்லிக்குள் டிராக்டர்களுடன் அவர்கள் நுழைய முற்பட்டதால் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் லேசான தடியடி நடத்தியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

விவசாயிகள் மீது தடியடி நடத்திய சம்பவம் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விவசாயிகள் மீதான தடியடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள் திடீர் மூடல்.. பொதுப் பணித் துறை அறிவிப்பால் மக்கள் ஏமாற்றம்எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள் திடீர் மூடல்.. பொதுப் பணித் துறை அறிவிப்பால் மக்கள் ஏமாற்றம்

விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசுதல், தண்ணீர் பீய்ச்சுதல், லேசான தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு டெல்லி போலீஸார் தள்ளப்பட்டனர். விவசாயிகளின் நடவடிக்கைகளால்தான் டெல்லி போலீஸார் கடுமையாக நடந்து கொள்ள நேரிட்டது.

இந்த பேரணியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு மத்தியில் முகக் கவசம் அணியாமல் விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

English summary
Ministry of Home Affairs justifies police action against farmers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X