டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி மருத்துமனையில் அமித்ஷா அதிரடி விசிட்- சிசிடிவி கேமராக்கள், கேண்டீன்களை அதிகரிக்க உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா மிக வேகமாக பரவி வரும் டெல்லியில் இன்று திடீரென லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் (LNJP) உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள், கேண்டீன்களை அதிகரிக்கவும் அமித்ஷா உத்தரவிட்டார்.

டெல்லியில் மின்னல் வேகத்தில் கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து டெல்லி மாநில அரசுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.

Home Minsiter Amit Shah visits Delhi hospital

அப்போது டெல்லியில் கொரோனாவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனையின் போது டெல்லியில் மருத்துவ படுக்கைகளின் தேவைகளை கருதி படுக்கைகளாக மாற்றப்பட்ட 500 ரயில் பெட்டிகளை மத்திய அரசு வழங்கும் என அறிவித்தார் அமித்ஷா. இதன் பின்னர் டெல்லியின் பல்வேறு தரப்பினருடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

Home Minsiter Amit Shah visits Delhi hospital

மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்த சுஷாந்த்.. டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்து கொள்ளாதது ஏன்?மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்த சுஷாந்த்.. டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்து கொள்ளாதது ஏன்?

இதனையடுத்து இன்று திடீரென திடீரென லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு சென்று அமித்ஷா பார்வையிட்டார். பின்னர் மருத்துவர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் பகுதியில் கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும் என்று அமித்ஷா உத்தரவிட்டார்.

அதேபோல் கொரோனா நோயாளிகளுக்கான உணவு வழங்குவதில் எந்தவித தடங்கலும் இல்லாத வகையில் கூடுதலான கேண்டீன்களை அமைக்கவும் அமித்ஷா உத்தரவிட்டிருந்தார்.

English summary
Union home minister Amit Shah directed to install CCTV cameras in Coronavirus wards of every dedicated hospitals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X