எல்லாமே சீக்ரெட்.. சோனியா, ராகுலின் "ரேடாரில்" சிக்காத 23 தலைவர்கள்..திடீரென ஒன்று சேர்ந்தது எப்படி?
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்குள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக 23 தலைவர்கள் ஒன்று சேர்ந்தது எப்படி, தலைமைக்கு தெரியாமல் எப்படி புரட்சி செய்தனர் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. எந்த பிளானும் லீக் ஆகாமல் மிக ரகசியமாக இவர்கள் 23 பேரும் ஒன்று சேர்ந்து காய்களை நகர்த்தி உள்ளனர்.
கடந்த திங்கள் கிழமை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எதிராக 23 தலைவர்கள் ஒன்று கூடிய நிலையில், இந்த கூட்டம் அவசரமாக நடந்தது. கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் இவர்களை 23 பேரும் கடிதம் எழுதி இருந்தனர்.
இதையடுத்து இன்னும் 6 மாதங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. அதுவரை சோனியா காந்தியே காங்கிரஸ் இடைக்கால தலைவராக நீடிப்பார் என்று அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா நீடிப்பார்.. இன்னும் 6 மாதத்தில் புதிய தலைவர்.. பரபரப்பு முடிவு!

எப்படி நடனத்தைத்
இந்த லெட்டர் எழுதிய 23 பேரும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக ஒரே நாளில் கொதித்து எழவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக திட்டம் போட்டு, சரியாக சொல்ல வேண்டும் என்றால் 5 மாதங்கள் திட்டம் போட்டு இவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். சோனியா, ராகுலின் ரேடாரில் சிக்காமல், உள்ளே புகுந்து இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை இவர்கள் நிகழ்த்தி உள்ளனர்.

தொடங்கியது எப்போது
5 மாதங்களுக்கு முன், கடந்த மார்ச் மாதம் இது தொடர்பாக முதல் விதை போடப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழ்ந்த பின் இந்த ஆலோசனை நடந்துள்ளது. ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவிற்கு தாவி மத்திய பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணமாக இருந்தார். இதன் பின்புதான் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுதாரித்துக் கொண்டே எழுந்து நின்றுள்ளனர்.

சிறிய கூட்டம் நடனத்தை நடத்தினர்
இதற்காக நிறைய கூட்டங்களை நடத்தி உள்ளனர். அதிலும் இந்த கூட்டங்களை எல்லாம் சிறியதாக நடத்தி உள்ளனர். தலைமைக்கு தெரியாமல் நடத்த வேண்டும் என்பதற்காக சின்ன சின்ன கூட்டங்களாக இதை நடத்தி இருக்கிறார்கள். அதிகபட்சம் 5 பேருக்கு மேல் இந்த கூட்டங்களில் கலந்து கொள்ள கூடாது என்று கூறியுள்ளனர். பெரும்பாலும் இந்த கூட்டங்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர் வீடுகளில் மட்டுமே நடந்துள்ளது.

சோனியா டீம்
ராகுல் காந்தி மூத்த தலைவர்களுக்கு எதிராக செயல்படுகிறார். சோனியாவுடன் நெருக்கமாக இருக்கும் தலைவர்கள் உடன் ராகுல் காந்தி மோதல் போக்கை கடைபிடிகிறார். ''எங்களை அவர் யமுனை ஆற்றில் போட பார்க்கிறார் '' என்று மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். இதை சோனியாவிடம் சொல்ல முயன்று, சோனியா அதற்கு செவி சாய்க்கவில்லை என்பதால்தான் மொத்தமாக எதிர்ப்பு லெட்டர் எழுதும் திட்டம் உருவாகி உள்ளது.

காப்பி கொடுக்கவில்லை
அதிலும் இந்த லெட்டர் எழுதப்பட்ட பின், அதை யாருக்கும் காப்பி கொடுக்கவில்லை. குலாம் நபி அசாத் மற்றும் கபில் சிபல் மட்டுமே இதை தங்களுடன் வைத்துள்ளனர். இதை 23 தலைவர்களின் கூட்டங்களில் படித்து மட்டுமே காட்டியுள்ளனர். அதிலும் முதலில் 10-12 என்று கொஞ்சம் கொஞ்சமாக ஆள் சேர்த்து, அதன்பின் 23 நம்ப தகுந்த அதிருப்தி உறுப்பினர்களை குழுவில் சேர்த்து கையெழுத்து வாங்கி உள்ளனர்.

லீக் ஆக கூடாது
எந்த தகவலும் லீக் ஆக கூடாது என்று இவ்வளவு கட்டுப்பாடுகளை கடைபிடித்து இருக்கிறார்கள். அதிலும் ஆகஸ்ட் 10 ம் தேதியே முதல் கடிதத்தை அனுப்ப திட்டமிட்டு இருந்தனர். அதுதான் காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்று ஒருவருட தேதி ஆகும். ஆனால் அப்போது சோனியா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்ந்தார். இதனால் அப்போது அந்த லெட்டரை அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஆகஸ்ட் 7 வரை லெட்டர் அனுப்பப்படவில்லை.

கவனம் இல்லை
ஆகஸ்ட் 7ம் தேதி முதல் லெட்டர், சின்ன சின்ன கோரிக்கையுடன் அனுப்பப்பட்டுள்ளது அதன்பின் ஒரு வாரம் கழித்து இன்னொரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தலைமையுடன் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது எதையும் சோனியா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கு எல்லாம் சோனியாவிடம் இருந்து பதில் வரவில்லை. இதையடுத்தே கடந்த சனிக்கிழமை சோனியாவிற்கு 23 தலைவர்கள் கூட்டாக, காரிய கமிட்டி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளனர்.

ராகுல் செய்த செயல்
முதல் இரண்டு கடிதங்களை ராகுல் காந்தி சோனியாவிடம் காட்டவே இல்லை என்று கூறுகிறார்கள். சோனியா உடல்நிலை சரியாக இல்லாத காரணத்தால் இதை ராகுல் காந்தி அவரிடம் காட்டவே இல்லை என்றும் கூறப்படுகிறது. இதன் பிறகே அந்த மூன்றாவது கடிதம் எழுதப்பட்டது. சனிக்கிழமை இந்த கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், திங்கள் கிழமை காரிய கமிட்டி கூட்டம் நடந்தது.. அதில் காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய அமளி துமளியே ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி புதிய தலைவருக்காக எதிர்நோக்கி உள்ளது .












Click it and Unblock the Notifications