கபடி கற்க வந்த மாணவியுடன் காதல்.. திருமணம் செய்ய ஆணாகவே மாறிய மீரா டீச்சர்! கலக்கல் டும் டும் டும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் வினோதமான முறையில் நடந்துள்ள காதல் கதை இங்குப் பலரது கவனத்தையும் ஈரத்து உள்ளது.

பொதுவாகவே காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். அதாவது இந்த உலகத்தில் எப்போது யாருக்கு யார் மீது காதல் வரும் என ஒருவருக்கும் தெரியாது. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

எதற்காக ஒருவர் மீது காதல் வருகிறது என்பதை நாம் கண்டறியவே முடியாது. ஆனாலும், ஒருவர் மீது அழிவு கடந்து நேசம் வைப்போம். இது தான் காதலுக்கே அழகு என்று கூடச் சொல்லலாம்.

 ராஜஸ்தான்

ராஜஸ்தான்

சமூகத்தில் உள்ள வேறுபாடுகள் அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் காதல் கடந்துவிடும். பல்வேறு உதாரணங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. தான் காதலித்த ஒரு பெண்ணை கரம் பிடிக்க மற்றொரு பெண் ஆணாகவே மாறியுள்ளார். இதற்காக அவர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யவும் கூட தயங்கவில்லை.

 ஆசிரியர் மாணவி

ஆசிரியர் மாணவி

மீரா என்ற ஆசிரியர் தான் தனது காதலியை மணக்கப் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இவர் கடந்த 2016இல் ராஜஸ்தானில் உள்ள அரசுப் பள்ளியில் கபடி ஆசிரியராக இருந்துள்ளார். அப்படித்தான் கபடி கற்க வந்த கல்பனா என்ற பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. கபடி கற்க வந்த கல்பனாவுக்கும் இவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டு உள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

 கல்பனா

கல்பனா

அப்போது தான் இவர்களுக்குள் இருந்த நட்பு அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. கடந்த 2018இல் மீரா (ஆரவ்) கல்பனாவிடம் தனது காதலி ப்ரோபோஸ் செய்துள்ளார். மேலும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கேட்டுள்ளார். இதற்காகவே இத்தனை நாட்கள் காத்திருந்த கல்பனாவும் பிரபோஸ் செய்த உடன் ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும், இதற்கு அவர்கள் வீட்டில் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை.

 ஆப்ரேஷன் செய்த மீரா டீச்சர்

ஆப்ரேஷன் செய்த மீரா டீச்சர்

இரண்டு பெண்கள் திருமணம் கொண்டால் அவர்களை சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்று கருதிய அவர்களின் பெற்றோர்கள், திருமணத்திற்கு முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இருப்பினும், கல்பனா மீது வைத்திருந்த காதலால் அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்த மீரா தனது பாலினத்தையே மாற்றி, ஆணாக மாற முடிவு செய்துள்ளார்.

 இயல்பான முடிவு

இயல்பான முடிவு

இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், "குழந்தையாக இருந்த போதில் இருந்தே நான் என்னை ஆணாகவே உணர்ந்து உள்ளேன். எனவே பாலின மாற்று அறுவை சிகிச்சை என்பது எனக்கு இயல்பாகவே இருந்தது" என்றார். தனது பாலினத்தை மாற்றிக் கொள்ள மீரா தொடர்ச்சியாக பல்வேறு ஆப்ரேஷன்களை செய்ய வேண்டி இருந்தது. கடந்த 2019இல் இதற்காக அவருக்கு முதல் ஆப்ரேஷன் செய்யப்பட்ட நிலையில் 2021 வரை இது தொடர்ந்தது.

 பெற்றோர் சம்மதம்

பெற்றோர் சம்மதம்

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர், இவர் தனது பெயரை ஆரவ் குந்தல் என்று மாற்றிக் கொண்டார். ஆப்ரேஷனுக்கு பின்னர் மீண்டும் திருமண் செய்து வைக்கும்படி கல்பனாவின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதை அவர்களது பெற்றோர்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர். சமீபத்தில் தான் அவர்களுக்கு வெகு சிறப்பாக திருமணமும் நடந்து முடிந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+