அனல் தெறிக்க பேசிய ராகுல் காந்தி.. எங்களை காப்பாற்றுங்கள் சபாநாயகரே.. கோரிக்கை வைத்த அமித் ஷா
டெல்லி: குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பல்வேறு விவகாரங்கள் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது .
சமூக வலைத்தளங்களில், ராகுல் பேசிய காணொளிகளைப் பகிர்ந்து பலரும் விவாதம் செய்து வருகின்றனர். நீட் விவகாரம், சபாநாயகரின் ஒருதலைபட்சம், சான்சத் தொலைக்காட்சியின் செயல்பாடுகள், மோடியின் செயல்பாடுகள் என்று பல விஷயங்களை ராகுல் காந்தி இன்று விவரமாக பேசினார்.

அவருக்கு பதிலடி கொடுக்க பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, சிவராஜ் சிங் சவுகான், ராஜ்நாத் சிங் என்று பலர் மீண்டும் மீண்டும் பேசியும் கூட ராகுல் காந்தி அவையில் விடாமல் பேசியது நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது.
ராகுல் பேச்சு: ராகுல் காந்தி தனது பேச்சில், அதானி, அம்பானியின் ₹14 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்யும் பாஜக அரசு, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்? எழுதி வைத்துக் கொள்ளுங்கள், குஜராத்தில் பாஜக தோற்கடிக்கப்படும்
நீட் தேர்வு மீது மாணவர்களே நம்பிக்கை இழந்துவிட்டனர். இது பணக்காரர்களுக்கான தேர்வு என தங்களை சமாதானம் செய்துகொள்கின்றனர். நீட் தேர்வு வியாபார ரீதியாக நடத்தப்படுகிறது. பணக்காரர்களின் குழந்தைகளுக்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. 7 ஆண்டுகளில் 70 முறை நீட் வினாத்தாள் கசிந்துள்ளன. பணம் இருந்தால்தான் மருத்துவப் படிப்பு என்ற நிலையை நீட் உருவாக்கியுள்ளது.
நீட் குறித்து விவாதிக்க கோரினால் அரசு அதை பரிசீலிக்கவில்லை. நீட் முறைகேடு குறித்து குடியரசுத் தலைவரின் உரையில் எதுவும் இடம்பெறவில்லை. எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். என்னைப் பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மை சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை.
USE AND THROW' முறையில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முறைதான் பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டம். இந்த திட்டத்தில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தால் அதை பாஜக அரசு வீர மரணமாக ஏற்காது.
ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அதானி, அம்பானிக்கு அழைப்பு. ஆனால், அயோத்தியில் உள்ள தொழிலாளிகள், விவசாயிகள் விழாவிற்கு அழைக்கப்படவில்லை. அயோத்தி மேம்பாட்டு திட்டத்துக்காக ஏராளமான நிலங்கள் பறிக்கப்பட்டதாகவும், அதற்கான உரிய இழப்பீட்டை வழங்கவில்லை. நரேந்திர மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். மட்டுமே இந்து சமூகம் கிடையாது.
சபாநாயகராக நீங்கள் தேர்வு செய்யப்பட்டபோது உங்களுக்கு நானும் கை கொடுத்தேன் பிரதமர் மோடியும் கை கொடுத்தார். நான் கை கொடுத்தபோது நீங்கள் நிமிர்ந்து நின்று கை கொடுத்தீர்கள். பிரதமர் மோடி கை கொடுத்தபோது உடனே குனிந்து அவருக்கு கை கொடுக்கிறீர்கள் என்று மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா அரசியல் சார்பு இல்லாமல் செயலாற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் சம்பவம்: குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பல்வேறு விவகாரங்கள் நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது .
மொத்த பாஜகவையும் அதிர வைக்கும் அளவிற்கு , மோடி எழுந்து நின்று இரண்டு முறை குறுக்கிடும் அளவிற்கு ராகுல் காந்தியின் பேச்சுக்கள் மிக சிறப்பாக இருந்தன.
அமித் ஷா கோபம்: ஒரு கட்டத்திற்கு மேல் அமித் ஷா வே சபாநாயகர் மேல் கோபம் அடைந்து, அவையில் இது எப்படித் தொடர முடியும்.. எப்படி இந்த பேச்சை அனுமதிக்கிறீர்கள்? சபாநாயகர் நீங்கள் பாரபட்சமாக நடந்து கொள்கிறீர்கள். விதிகளை மீறிச் சென்று, அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவதற்கு அவருக்கு வாய்ப்பளிக்கிறீர்கள். தயவு செய்து இதிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். இது தவறு என்று சபாநாயகரிடம் மன்றாடும் அளவிற்கு அமித் ஷா சென்றார். .
திக்குமுக்காடிய பாஜக; சபாநாயகர் பிர்லாவும் எதுவும் செய்ய முடியாமல்.. மைக்கை அணைத்தாலும் சாதாரணமாகவே ராகுல் குரலெடுத்து பேசியதால் வேறு வழி இல்லாமல் ஓம் பிர்லா இந்த பேச்சை அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications