15 நிமிட திக்திக்.. நிலவில் விக்ரம் லேண்டர் எப்படி தரையிறங்கும்? அடுத்தது என்ன? அது என்ன ரோவர்!
டெல்லி: இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்தின் கீழ் நாளை நிலவின் தென்துருவத்தில் லேண்டர் தரையிறங்க உள்ளது. இதன்மூலம் நிலவின் தென்துருவ ஆய்வை மேற்கொள்ளும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைய உள்ளது. இந்நிலையில் தான் நாளை லேண்டர் நிலவின் தென்துருவத்தில் எப்படி தரையிறங்கும் 15 நிமிட திக்திக் நிமிடத்தில் என்ன நடக்கும்? என்பது தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான் 3 திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவில் ஏற்கனவே தரையிறங்கி ஆய்வு செய்துள்ளன. இருப்பினும் இந்த நாடுகள் நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்யவில்லை.

இந்நிலையில் தான் இந்தியா சந்திரயான் 2 விண்கல திட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு அமல்படுத்தியது. இந்த திட்டம் மயிரிழையில் தோல்வியடைந்தது. அதாவது நிலவின் தென்துருவத்தில் மெதுவாக விக்ரம் லேண்டர் தரையிறங்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக லேண்டர் நிலவின் தென்துருவத்தில் விழுந்து நொறுங்கியது.
இருப்பினும் சந்திரயான்- 2 திட்டத்தின் ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்றுவட்டபாதையில் கடந்த 4 ஆண்டுகளாக சுற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் சந்திரயான் 3 கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது வரை இந்த திட்டம் திட்டமிட்டப்படி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பூமியின் சுற்றுவட்டபாதையை கடந்து நிலவின் சுற்றுவட்டபாதைக்குள் சந்திரயான் 3 உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது.
விக்ரம் லேண்டர் நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்க உள்ளது. ஒருவேளை தரையிறங்குவதற்கான சூழல் இல்லாவிட்டால் வரும் 27ம் தேதியில் லேண்டர் தரையிறக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. நிலவின் லேண்டர் தரையிறங்கிய பிறகு ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் மேற்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இத்தகைய சூழலில் தான் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பிறகு என்ன நடக்கும் என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வருமாறு:
நிலவின் தென்துருவத்துக்கு தரையிறங்குவதற்கு முன்பு திட்டமிட்டப்பட்டபடி சந்திரயான் 2 திட்டத்தின் ஆர்பிட்டருடன் நேற்று சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் கருவி தொடர்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக நிலவின் தென்துருவ ஆய்வு செய்வதற்காக விக்ரம் லேண்டர் கருவி நாளை மாலை 6.04 மணிக்கு தரையிறங்க உள்ளது. தற்போது நிலவின்மேற்பரப்பில் சுற்றி வரும் லேண்டர் இஸ்ரோ விஞ்ஞானிகள் மூலம் நாளை நிலவில் தரையிறக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த பணிகள் என்பது 15 நிமிடத்தில் நடக்கும். இந்த 15 நிமிடங்கள் தான் மிகவும் முக்கியது. இந்த வேளையில் லேண்டர் கருவி நிலவின் சமதள பரப்பை கண்டறிந்து அதில் தரையிறங்கும். கடந்த முறை சந்திரயான் 2 திட்டம் இந்த சமயத்தில் தான் விழுந்து நொறுங்கியது. ஏனெ்னறால் உண்மையிலேயே இதுதான் மிகவும் சவாலான இடமாகும். இதனை சாதிக்கும் முனைப்பில் தான் இந்தியா செயல்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 15 நிமிடங்களில் கடைசி 4 நிமிடம் என்பது மிகவும் முக்கியமாகும்.
இது வெற்றிகரமாக நடக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு நாளை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் லேண்டர் கருவியில் இருந்து ரோவர் வாகனம் வெளியே வரும். இந்த ரோவர் கருவி லேண்டரில் இருந்து சாய்வுதளம் மூலமாக நிலவில் தரையிறங்கும். லேண்டர் தரையிறங்கிய பிறகு 4 மணி நேரத்துக்கு பிறகு ரோவர் வாகனம் வெளியேறும்.
இந்த ரோவர் கருவி தான் நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வு செய்ய உள்ளது. ரோவர் வாகனம் மொத்தம் 14 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும். இது மொத்தம் 6 சக்கரங்களுடன் இயங்க உள்ளது. இந்த சக்கரங்களில் இந்திய தேசியக்கொடி மற்றும் இஸ்ரோவின் லோகா அச்சுக்கள் பொறிக்கப்பட்டுள்ன. இந்த அச்சுக்கள் நிலவின் மேற்பரப்பில் பதிய வைக்கப்பட உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் பெயர் நிலவில் பொறிக்கப்பட உள்ளது.
இந்த ரோவர் கருவி என்பது மிகவும் மெதுவாக நகர்ந்து ஆய்வு செய்யும். அதாவது வினாடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் தான் நிலவில் நகரும். இப்படி நகரும்போது அதிநவீன கேமராக்கள் மூலம் நிலவை படம்பிடித்து அனுப்ப உள்ளது. சந்திரன் ஆய்வுகள் குறித்த முக்கிய விபரங்களை இஸ்ரோவுக்கு அனுப்பும் கருவிகள் ரோவரில் உள்ளன. இந்த ரோவர் நிலவின் மேற்பரப்பில் உள்ள மூலக்கூறுகளை ஆய்வு செய்ய உள்ளது.
அதேவேளையில் நிலவில் தரையிறங்கி உள்ள விக்ரம் லேண்டர் என்பது அங்குள்ள அயனிகள் மற்றும் எலக்ட்ரான்கள் குறித்த ஆய்வுகளை செய்யும். அந்த பகுதியில் உள்ள வெப்பத்தின் அளவுகள், நிலஅதிர்வுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உள்ளது. மேலும் ரோவர் வாகனம் இயங்குவதற்கு தேவையான சூர்யசக்தி ஆற்றலை லேண்டர் தனது சூரியத்தகடுகள் மூலம் உற்பத்தி செய்து வழங்க உள்ளது. இதன்மூலம் ரோவர் ஆய்வுக்கு லேண்டர் முக்கிய பங்கு வகிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications